சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனநலம் பாதித்தவர் மீட்பு :சரணாலயத்தில் ஒப்படைப்பு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், மனநிலை பாதிக்கப்பட்டவரை மீட்டு மேற்கு போலீசார், சரணாலய நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் மேற்கு எஸ்.ஐ., கதிர்வேல், தலைமை காவலர்கள் ஞானவேல், ராஜ்குமார் ஆகியோர் ரோந்து பணி சென்றனர். அப்போது, ரோட்டில் சுற்றித்திரிந்த மனநிலை பாதித்தவர் குறித்து அப்பகுதியில், விசாரித்தனர். இந்நிலையில், கிணத்துக்கடவு, சரணாலயம் காப்பகத்தில் இருந்து மனநிலை பாதிக்கப்பட்ட, 37 வயது மதிக்கதக்க ராஜ்குமார் தப்பி வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அந்த நபர், இவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், போலீசார், சரணாலய நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த நிர்வாகிகள், அந்நபர் ராஜ்குமார் என உறுதி செய்தனர். இதனையடுத்து, அந்த நபரை, நிர்வாகிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X