பொது செய்தி

தமிழ்நாடு

பறவைகள் சரணாலய பகுதியில் ஆலை கழிவுகள் வெளியேற்றம்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

சென்னை; வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய பகுதியில், தனியார் ஆலை கழிவுகள் திறந்து விடப்படுவதால், நிலம், நீர் மற்றும் காற்று மாசு அடைந்துள்ளதாக, அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின், 5 கி.மீ., சுற்றளவு பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. சிக்கல்இதன் சுற்றளவை மறுவரையறை செய்ய வனத்துறை முயற்சித்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, இத்திட்டத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான பிரச்னையின் போது, தமிழக வனத்துறையின் தலைமை வன உயிரின பாதுகாவலரும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து விளக்கம் அளித்தன.அதில், வேடந்தாங்கல் சரணாலயத்தை ஒட்டியுள்ள, தனியார் மருந்து ஆலை, மாசு கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு முறையாக செயல்படுகிறது என, தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை காலநிலை மாற்ற செயல் குழுவினர், வேடந்தாங்கல் பகுதியில் கள ஆய்வு நடத்தினர். இது குறித்து, அவர்கள் கூறியதாவது:பறவைகள் சரணாலயம் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதியின் எல்லைக்குள், சிவப்பு நிற பிரிவில் உள்ள ஆலைகள் இயங்க அனுமதிக்க கூடாது.

ஆனால், சரணாலயத்தின், 5 கி.மீ., சுற்றளவுக்குள் தனியார் மருந்து ஆலை செயல்படுகிறது.அதிலிருந்து, மழை நீருடன் சேர்த்து, ரசாயன கழிவுகள் வெளியேற்றப்படுவதாக, அப்பகுதி மக்கள் கூறினர். விவசாயிகள் புகார் அடிப்படையில், இங்கு மண், தண்ணீர் மாதிரிகளை சேகரித்து பரிசோதித்தோம்.பாதுகாப்புமருந்து தயாரிப்பில் வெளியேற்றப்படும், குறிப்பிட்ட சில வகை ரசாயனங்களின் தாக்கம், மண் மற்றும் நீரில் இருப்பது உறுதியானது.

சூழலியல் பாதுகாப்பு விதிகள் இங்கு முறையாக அமல்படுத்தப்படாதது உறுதியாக தெரிகிறது.இந்த அறிக்கை, அரசுக்கும், வனத்துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இந்த விஷயத்தில், வனத்துறை விதிகளுக்கு உட்பட்டு செயல்பட முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X