பொது செய்தி

தமிழ்நாடு

சேறும் சகதியுமான சாலை பொதுமக்கள் கடும் அவதி

Added : ஆக 02, 2020
Share
Advertisement

நடுவீரப்பட்டு : பத்திரக்கோட்டை, பட்டிக்குப்பத்தில் சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டையில் உள்ள பகுதி பட்டிக்குப்பம். இந்த பகுதியில் 500 மீட்டர் துாரத்தில் ஊருக்குள் செல்லும் சாலை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. சாலையை சீரமைக்கக் கோரி, அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித பயனும் இல்லை. கடந்த ஆண்டு, 100 மீட்டர் துாரம் வரை சிமென்ட் சாலை போடப்பட்டது. மீதியுள்ள 400 மீட்டர் சாலை மிக மோசமாக இருந்தது.நேற்று முன்தினம் இப்பகுதியில் பெய்த மழையால், சாலையில் தண்ணீர் தேங்கி, சாலையோரமுள்ள வீடுகளுக்குள் புகுந்தது.

மேலும் சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால், இந்த பகுதியில் வசிப்பவர்கள் வெளிப் பகுதிகளுக்கு செல்ல மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் அவதியடைகின்றனர்.எனவே, பண்ருட்டி ஒன்றிய அதிகாரிகள் இந்த சாலையினை ஆய்வு செய்து தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X