பொது செய்தி

தமிழ்நாடு

கோயம்பேடு மார்க்கெட் இப்போது திறப்பில்லை வியாபாரிகள் கோரிக்கையை நிராகரித்தது அரசு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

சென்னை; கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க வேண்டும் என்று, வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அவர்களின் கோரிக்கையை அரசு நிராகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால், மே மாதம் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. தற்காலிக காய்கறி மார்க்கெட், திருமழிசையில் இயங்கி வருகிறது. இங்கு, 200 மொத்த வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கப்பட்டு உள்ளது.மாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில், தற்காலிக பழ மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு, 150 மொத்த வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

திருமழிசை மற்றும் மாதவரத்தில் மொத்த விற்பனை மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனால், கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்த சிறு மற்றும் மொத்த வியாபாரிகள், 2,000 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.மழையால், திருமழிசை மற்றும் மாதவரத்தில் வியாபாரிகள் அவதிக்குள்ளாவதாக புகார் எழுந்தது. எனவே, மார்க்கெட்டை திறக்க வேண்டும் என, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து, வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இதன் காரணமாக, ஆகஸ்ட் முதல் வாரத்தில் மார்க்கெட் திறக்கப்படும் என்ற தகவல் பரவியது.

இம்மாத இறுதி வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளதால், இந்த நேரத்தில் கோயம்பேடு மார்க்கெட்டை திறப்பது சரியாக இருக்காது என, அரசு முடிவுக்கு வந்துள்ளது.இதனிடையே, முகப்பேரில் உள்ள அம்பேத்கர் மைதானத்தில், காய்கறிகள் சில்லரை மார்க்கெட் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இங்கு, 200 வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இடத்தை வியாபாரிகளும், அங்காடி நிர்வாக குழு அதிகாரிகளும் சமீபத்தில் ஆய்வு செய்துள்ளனர். இதேபோல, அண்ணாநகரில் உள்ள மைதானமும் மார்க்கெட் திறப்பதற்காக ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X