பொது செய்தி

தமிழ்நாடு

அணி நடவு முறையில் ஆர்வம்: விவசாயிகளுக்கு பயிற்சி தீவிரம்

Added : ஆக 02, 2020
Share
Advertisement
 அணி நடவு முறையில் ஆர்வம்: விவசாயிகளுக்கு பயிற்சி தீவிரம்

ஆனைமலை:ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், விவசாயிகள் அணி நடவு முறையை பின்பற்றி ஆர்வமாக நெல் நடவு செய்து வருகின்றனர்.ஆனைமலை ஒன்றிய பகுதியில் நடப்பாண்டு முதல் போக நெல் சாகுபடி செய்வதற்காக, ஜூன், 7ம் தேதி ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.நிலத்தில் உழவு மேற்கொண்டு, நெல் நாற்றாங்கால் விட்டனர். நாற்றாங்காலில் உள்ள நெல் நாற்றுகள் வளர்ந்து நடவுக்கு தயாராகி உள்ளது. இதையடுத்து, ஒன்றியம் முழுவதிலும் நடவுப்பணிகள் தீவிரமாக நடக்கிறது.இந்நிலையில், திக்கால் நடவு, இயந்திர நெல் நடவு முறைகளை பின்பற்றி வந்த விவசாயிகள் பலரும், அதிக மகசூல் பெறுவதற்காக, திருந்திய நெல் சாகுபடியில் அணி நடவு முறையை பின்பற்றி வருகின்றனர்.வேளாண்துறை அதிகாரிகள் வயல்களுக்குச் சென்று ஆய்வு செய்து, முறையாக அணி நடவு செய்வது குறித்து பயிற்சியளித்து வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், 'அணி நடவு முறையில், கயிறு கட்டி, நேர் வரிசையாக, 21 செ.மீ., இடைவெளி விட்டு நாற்று நடவு செய்யப்படுகிறது.இந்த இடைவெளியால் பயிர்களுக்கு போதிய அளவு காற்றோட்டம் கிடைக்கிறது. எலி தொல்லை குறையும். களையெடுப்பு எளிதாக இருக்கும். சூரிய ஒளி சீராக விழுவதால், மகசூல் அதிகரிக்கும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X