அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிகிச்சைக்கு கட்டணம்: முதல்வர் எச்சரிக்கை

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
CoronaVirus, Corona Treatment, EPS, Covid19, Tamil Nadu, கொரோனா, சிகிச்சை, முதல்வர், பழனிசாமி

சென்னை; 'கொரோனா சிகிச்சைக்கு, தனியார் மருத்துவமனைகள், கூடுதல் கட்டணம் வசூலித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, முதல்வர் இ.பி.எஸ்., எச்சரித்துள்ளார்.

அவர் தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று சிகிச்சைக்கு, அரசு நிர்ணயித்ததை விட, கூடுதல் கட்டணம் வசூலித்த, சென்னை கீழ்ப்பாக்கம், 'பி வெல்' தனியார் மருத்துவமனைக்கு, கொரோனா சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட, அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சை வழங்கும், அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விபரம் தெளிவாக, பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும்.கொரோனா சிகிச்சைக்கு, தனியார் மருத்துவமனைகள், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக, புகார் பெறப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sai Ram - chennai,இந்தியா
03-ஆக-202012:22:39 IST Report Abuse
Sai Ram முதலில் இலவசமாக இறந்தவர்களை எரிக்க அல்லது புதைக்க அரசாணை தாருங்கள் - கொரோனாவால் இறந்தவர்களுக்கு அரசு தரும் மரியாதை - இந்த சாமத்தில், எரிகிற வீட்டில் புடுங்கற வரைக்கும் லாபம் என செயல் படும் கூட்டம் தான் அதிகம் - மயானத்தில் ,108 Ambulance, Mortuary, எல்லா இடத்திலும் பணம் அதிக பணம் தந்தால் தான் ........
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
03-ஆக-202008:49:13 IST Report Abuse
Mani . V ஆமா, மருந்தே கண்டு பிடிக்காத கொரோனாவுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள பதினான்கு லட்ச ரூபாய்க்கு மேல் ஒரு பைசா கூடுதலாக வசூல் செய்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். (ஆம், நடவடிக்கை உக்கிரமாக இருக்கும்)
Rate this:
Ayyathurai Balasingham - Tirunelveli,இந்தியா
03-ஆக-202010:29:15 IST Report Abuse
Ayyathurai Balasinghamகுட் மணி குட்கா வியாபாரம் எப்படி போகுது? திமுக ஆட்சியை எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்கீங்களா குட் மணி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X