தமிழ்நாடு

போலீஸ் தாக்கியதால் தீக்குளித்த தொழிலாளி மரணம் புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'

Added : ஆக 02, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை; வீட்டை காலி செய்யும் பிரச்னையில், இன்ஸ்பெக்டர் தாக்கியதால் மனமுடைந்த தொழிலாளி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தொழிலாளியின் தற்கொலைக்கு காரணமான, புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பென்சாம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். சென்னை, புழல் அடுத்த விநாயகபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 52. இவருக்கு சொந்தமான வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். தகாத
 போலீஸ் தாக்கியதால் தீக்குளித்த தொழிலாளி மரணம் புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'

சென்னை; வீட்டை காலி செய்யும் பிரச்னையில், இன்ஸ்பெக்டர் தாக்கியதால் மனமுடைந்த தொழிலாளி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தொழிலாளியின் தற்கொலைக்கு காரணமான, புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பென்சாம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். சென்னை, புழல் அடுத்த விநாயகபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 52. இவருக்கு சொந்தமான வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். தகாத வார்த்தைராஜேந்திரனின் ஒரு வீட்டில், சென்னை ஓட்டேரியை சேர்ந்த, பெயின்டிங் தொழிலாளி சீனிவாசன், 40, ஓராண்டாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தாண்டு ஜனவரியில், பக்கத்து வீட்டு பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி, அவரை தாக்கிய வழக்கில், புழல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து விடுதலையான பின், குடிபோதையில் மற்ற வாடகைதாரர்களிடம், தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால், அவர்களும், அக்கம்பக்கத்தில் வசிப்போரும், வீட்டு உரிமையாளரான ராஜேந்திரனிடம், சீனிவாசன் குறித்து தொடர்ந்து புகார் கூறினர். அவர், சீனிவாசனை வீட்டை காலி செய்யும்படி நெருக்கடி கொடுத்தார். ஆனால், அவரோ காலி செய்ய மறுத்து காலம் கடத்தி வந்தார். பொறுமை இழந்த ராஜேந்திரன், ஜூலை, 27ல், சீனிவாசன் மீது புழல் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணைக்கு அழைத்த போதெல்லாம், சீனிவாசன் ஒத்துழைக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம் இரவு, புழல் இன்ஸ்பெக்டர் பென்சாம், சம்பவ இடத்திற்கு சென்றார். அங்கு, சீனிவாசன் குடிபோதையில் இருந்ததால், 'நாளை காலை கட்டாயம், விசாரணைக்கு வர வேண்டும்' எனக் கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. மேலும், சீனிவாசனை, அவரது மனைவி விஜி, இரு மகள்கள் மற்றும் பொதுமக்கள் முன், இன்ஸ்பெக்டர் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இரவு, 11:30 மணி அளவில், தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சீனிவாசன், உயிருக்கு ஆபத்தான நிலையில், தெருவில் ஓடினார். அதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், புழல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, 80 சதவீத காயங்களுடன் உயிருக்கு போராடினார்.விசாரணைஅப்போது, மருத்துவமனையில் அவர் அளித்த மரண வாக்குமூலத்தில், 'புழல் இன்ஸ்பெக்டர், விசாரணை என்ற பெயரில், என்னை தெருவில் வைத்து அடித்தார். வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும் என, மிரட்டினார். அதனால் மனமுடைந்து தீக்குளித்தேன்' என்றார். தீவிர சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன், நேற்று மதியம், 2:00 மணி அளவில் உயிரிழந்தார். சம்பவம் குறித்து விசாரித்த, வடக்கு மண்டல இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பென்சாமை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், போலீசாரால், தந்தை, மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்கில், விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில், இன்ஸ்பெக்டர் தாக்கியதால், தொழிலாளி தீக்குளித்து இறந்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.'குடும்பத்திற்கு நிவாரணம் கொடுங்க...' பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் அறிக்கை: சென்னையை அடுத்த புழல் விநாயகபுரத்தில், மனைவி மற்றும் குழந்தைகள் முன், இன்ஸ்பெக்டர் தாக்கியதால் அவமானமடைந்து, தீக்குளித்த கூலி தொழிலாளி சீனிவாசன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கூலி தொழிலாளி எந்த குற்றமும் செய்யவில்லை. ஊரடங்கால், வருமானமின்றி, வாடகை செலுத்த முடியவில்லை. வாடகை பணத்தை கட்டாயப்படுத்தி வாங்கக் கூடாது என, அரசு கூறியுள்ளது. வீட்டின் உரிமையாளர் போலீசில் புகார் செய்தது, மனித நேயமற்ற செயல் என்றால், வீடு புகுந்து சீனிவாசனை, இன்ஸ்பெக்டர் பென்சாம் தாக்கியது சட்டவிரோத செயல். அவர் மீது, தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கு பதிவு செய்து, உடனே கைது செய்ய வேண்டும். சீனிவாசன் குடும்பத்தினருக்கு, ௨௫ லட்சம் ரூபாய் வழங்கி, குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
03-ஆக-202009:12:42 IST Report Abuse
RaajaRaja Cholan என்னையும் ஒரு அடையார் பஸ் டெப்போ போலீஸ் ஸ்டேஷன் ஆய்வாளர் ஒருத்தர் ஒன்பது வருடங்களுக்கு முன்பு அசிங்க படுத்த முனைந்தார், நான் ஒரு தவறும் செய்யவில்லை, அவன் வரும் பொழுது அவன் வழி விடவில்லை வழி விட்டு ஓரமாய் போக சொன்னது, அவனுக்கு தன்மானத்தை உரசி விட்டது, சீருடை கழட்டிநா செல்ல காசு என்று தெரியாதவன் மரியாதை இல்லாமல் பேசினான், அன்று உணர்ந்தென் இவனை மாதிரி சில்லறைகள் வசிக்கும் ஊரில் இருக்க கூடாது என்று, உடனே வேலை தேடி வேறு நாடு வந்து ஒன்பது ஆண்டுகள் ஆகி விட்டது, இன்றும் மனதளவில் அவனை சபித்து கொண்டு தான் இருக்கிறான். குற்றம் செய்யாத என்னை திட்டிய அவன் என்னை மனதளவில் காய படுத்தினான். அவன் பலம் சீருடை. இன்றும் என் மனதால் அவனையும் அவன் சார்ந்தவனையும் சபித்தேன். சில சில்லறை... காவல் பணியில் உள்ளவனில் இவனும் ஒருவன். நல்ல மிக நல்ல காவலர்கள் மன்னிக்கவும்
Rate this:
Cancel
03-ஆக-202006:45:54 IST Report Abuse
சூரியா தற்கொலை செய்துகொண்ட சீனிவாசன் செய்த அக்கிரமங்களையெல்லாம் மறைத்து, அவரை ஏதோ தியாகி போல வர்ணித்து, அவர் குடும்பத்திற்கு நிவாரணம் வேறு கேட்கும் கேவலமான அரசியல்வாதிகள் இருக்கும்வரை தமிழகம் உறுப்படாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X