பொது செய்தி

தமிழ்நாடு

இந்தியா பிஸ்டன் தலைவர் மறைவு

Added : ஆக 02, 2020
Share
Advertisement
 இந்தியா பிஸ்டன் தலைவர் மறைவு

சென்னை; 'இந்தியா பிஸ்டன்' நிறுவனத்தின் தலைவர், என்.வெங்கட்ரமணி, 80, உடல்நல குறைவால், சென்னையில் காலமானார்.சென்னையை தலைமையிடமாக கொண்டு, 'அமால்கமேஷன்' குழுமம் செயல்பட்டு வருகிறது.

இந்த குழுமத்தின் கீழ், சிம்சன், டபே டிராக்டர் உற்பத்தி, வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி உட்பட, பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றில் ஒன்று, இந்தியா பிஸ்டன் நிறுவனம். இதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக, வெங்கட்ரமணி செயல்பட்டு வந்தார். இவர், குழுமத்தின் ஐ.பி., ரிங்ஸ் நிறுவனம் உட்பட, பல்வேறு நிறுவனங்களிலும் தலைவராக இருந்துள்ளார்.

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியில், பரம கல்யாணி என்ற பெயரில் திருமண மண்டபம், கல்லுாரி போன்றவற்றை, தொண்டு நிறுவனம் வாயிலாக நடத்தி வந்தார்.இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக, சனிக்கிழமை, வெங்கட்ரமணி காலமானார். இவருக்கு, மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X