கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நேரடி விசாரணை ஐகோர்ட்டில் இல்லை

Added : ஆக 02, 2020
Share
Advertisement

சென்னை; ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து, இம்மாதம் முழுதும், உயர் நீதிமன்றத்தில் நேரடி விசாரணை கிடையாது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை, காணொலி காட்சி வழியாக நடக்கிறது. வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. வீடுகளில் இருந்தும், நீதிமன்ற அறைகளில் இருந்தும், காணொலி காட்சியில், வழக்கு விசாரணையை, நீதிபதிகள் நடத்துகின்றனர்.

உயர் நீதிமன்றத்தை திறந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, வழக்கு விசாரணையை நடத்தும்படி, தலைமை நீதிபதியிடம், வழக்கறிஞர்கள் கோரி வருகின்றனர். தமிழ்நாடு பார் கவுன்சிலும் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், வரும், 31ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மூத்த நீதிபதிகள் அடங்கிய நிர்வாக குழு கூடி, அரசு பிறப்பித்த வழிமுறைகள் மற்றும் வைரஸ் தொற்று நிலையை பரிசீலித்தது. பின், உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் வெளியிட்ட அறிவிப்பு: தற்போதைய நிலையை கருதி, உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்துவது, உகந்ததாக இருக்காது.

எனவே, தற்போது நீதிமன்றங்கள் எப்படி இயங்குகின்றனவோ, அதுவே, வரும், 31ம் தேதி வரை தொடரும்.தமிழகத்தில், 29 மாவட்டங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களை பொறுத்தவரை, ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி இயங்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இயங்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X