பொது செய்தி

தமிழ்நாடு

1.96 லட்சம் பேர் பூரண நலம் பெற்றனர் 57 ஆயிரம் பேருக்கு தொடருது சிகிச்சை

Added : ஆக 02, 2020
Share
Advertisement

சென்னை; தமிழகத்தில் நேற்று, 5,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானாலும், 5,517 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதுவரை வீடு திரும்பியோர் எண்ணிக்கை, 1.96 லட்சமாக உயர்ந்துள்ளது; 57 ஆயிரம் பேருக்கு சிகிச்சை தொடர்கிறது.இதுகுறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழகத்தில், 122 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.

இவற்றில், நேற்று மட்டும், 56 ஆயிரத்து, 738 பேருக்கு, பரிசோதனை நடத்தப்பட்டதில், 5,875 பேருக்கு நோய் தொற்று உறுதியானது.அதிகபட்சமாக சென்னையில், 1,065 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். செங்கல்பட்டில், 446; காஞ்சிபுரத்தில், 393; விருதுநகரில், 337; திருவள்ளூரில், 317; தேனியில், 309; துாத்துக்குடியில், 271; திருநெல்வேலியில், 201 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கன்னியாகுமரியில், 200; மதுரையில், 178; வேலுாரில், 173; ராணிப்பேட்டையில், 167; திருவண்ணாமலையில், 142; திருச்சியில், 136; சேலத்தில், 134 பேரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில், நேற்று வரை, 27.79 லட்சம் பேருக்கு நடந்த பரிசோதனையில், 2.57 லட்சம் பேருக்கு, நோய் தொற்று உறுதியாகியுள்ளது.சென்னையில் நேற்று வரை, ஒரு லட்சத்து, 1,951 பேர்; செங்கல்பட்டில், 15 ஆயிரத்து, 312; திருவள்ளூரில், 14 ஆயிரத்து, 430; மதுரையில், 11 ஆயிரத்து, 352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும், 5,517 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களோடு சேர்த்து, ஒரு லட்சத்து, 96 ஆயிரத்து, 483 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; 57 ஆயிரம் பேருக்கு சிகிச்சை தொடர்கிறது.நேற்று வரை, 4,132 பேர் இறந்துள்ளனர்; அவர்களில் சென்னையை சேர்ந்தவர்கள், 2,157 பேர். நேற்று மட்டும், தனியார் மருத்துவமனையில், 23 பேர், அரசு மருத்துவமனையில், 75 பேர் என, மொத்தம், 98 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை அருகே பாதிப்பு அதிகரிப்புசென்னையில், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால், சென்னையை ஒட்டியுள்ள, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிப்பு குறைவதாக இல்லை. இந்த மாவட்டங்களில், தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 300க்கும் மேல் உள்ளது. எனவே, இங்கு நோய் பரவலை தடுக்க, அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது, அம்மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X