சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் பலி

Added : ஆக 02, 2020
Share
Advertisement

திருக்கோவிலூர் : அரகண்டநல்லூரில் பைக்கில் சென்றவர் நாய் குறுக்கிட்டதால் தவறி விழுந்து சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அரகண்டநல்லூர் அடுத்த தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 51; தனது பைக்கில் கடந்த 29ம் தேதி காலை 11:00 மணி அளவில் வீட்டிலிருந்து அந்திலி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். போலீஸ் குடியிருப்பு அருகே சென்றபோது, திடீரென நாய் குறுக்கிட்டது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை உடனடியாக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதுகுறித்து அவரது மனைவி பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X