பொது செய்தி

தமிழ்நாடு

கடைகளுக்கு விழிப்புணர்வு பதாகை: போலீஸ் வினியோகம்

Added : ஆக 03, 2020
Share
Advertisement

திருக்கோவிலூர் : மணலூர்பேட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக போலீசார் கடைகளுக்கு விழிப்புணர்வு பதாகைகளை வழங்கினர்.

மணலூர்பேட்டையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக முகக் கவசம் அணிவதன் அவசியம், தனிமனித இடைவெளி, அவ்வப்பொழுது கை கழுவ வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை அச்சிட்டு ஒவ்வொரு கடைக்கும் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் வழங்கினர்.மேலும் பொது மக்களுக்கு தினசரி இலவசமாக முகக் கவசம் வழங்கப்பட்டு வருகிறது. மணலூர்பேட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் போலீசார் களமிறங்கி செயல்படும் நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X