வாலிபர் தூக்கிட்டு தற்கொலை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை 

Added : ஆக 03, 2020
Share
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விக்கிரவாண்டி அடுத்த செங்க மேடு கிராமத்தை சேர்ந்தவர் ரவி மகன் விக்னேஷ், 21: தச்சர் வேலை செய்து வந்தார். இவர் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டின் கதவு வெகுநேரமாக மூடி இருக்கவே சந்தேகம்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

விக்கிரவாண்டி அடுத்த செங்க மேடு கிராமத்தை சேர்ந்தவர் ரவி மகன் விக்னேஷ், 21: தச்சர் வேலை செய்து வந்தார். இவர் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டின் கதவு வெகுநேரமாக மூடி இருக்கவே சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டினுள் வந்து பார்த்த போது விக்னேஷ் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.

இது பற்றி தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X