முழு ஊரடங்கில் போக்குவரத்தின்றி கள்ளக்குறிச்சி சாலைகள் வெறிச்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முழு ஊரடங்கில் போக்குவரத்தின்றி கள்ளக்குறிச்சி சாலைகள் 'வெறிச்'

Added : ஆக 03, 2020
Share
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு காரணமாக போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெளிச்சோடி காணப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும், சென்ற மாதம் துவங்கி ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்க அரசு அறிவுறுத்தியது. வாரத்தின் முதல்நாளான நேற்று அனைத்து பகுதிகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு காரணமாக போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெளிச்சோடி காணப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும், சென்ற மாதம் துவங்கி ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்க அரசு அறிவுறுத்தியது. வாரத்தின் முதல்நாளான நேற்று அனைத்து பகுதிகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி நகர பகுதியில் பெட்ரோல் பங்க், வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

எப்போதும் 'பிஸி'யாக காணப்படும் சாலைகளும் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக மருத்துவமனைகள், மருந்து கடைகள், பால் பூத் ஆகியவை மட்டும் திறந்திருந்தன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X