பொது செய்தி

தமிழ்நாடு

புகார் எதிரொலியாக அன்னியூர் ஏரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

Added : ஆக 03, 2020
Share
Advertisement

விழுப்புரம் : அன்னியூர் கிராம ஏரி மராமத்துப் பணியை பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் அடுத்த அன்னியூர் கிராமத்தில் பெரிய அளவில் ஏரி அமைந்துள்ளது. இதன் மூலம் 900 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. தற்போது, ஏரிக்கு வரத்து வாய்க்கால் துார்ந்து போனதால், தண்ணீர் அளவு குறைந்துவிட்டது. இதையடுத்து கிராம பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, ரூ.44 லட்சம் செலவில், ஏரியை மேம்படுத்திட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதன்படி, ஏரியின் எல்லையை அளந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கம் செய்தல், கலுங்கல் கோடி பகுதியில் முட்புதர்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், திட்டமிடப்பட்ட பணிகளில் 25 சதவீத பணிகள் மட்டுமே செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை முழுமையாக செய்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், அன்னியூர் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.இதனையடுத்து, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவஹர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், அன்னியூர் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

அன்னியூர் ஏரி சீரமைப்பு பணியை, பார்வையிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் தரப்பில் கூறிய குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்வதாக தெரிவித்தனர்.அப்போது உதவி செயற்பொறியாளர் அன்பரசு, உதவி பொறியாளர்கள் ஞானசேகர், கனகராஜ், பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X