குடியுரிமை சட்ட விதிகள்; அவகாசம் கேட்கிறது உள்துறை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

குடியுரிமை சட்ட விதிகள்; அவகாசம் கேட்கிறது உள்துறை

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 03, 2020 | கருத்துகள் (4)
Share
புதுடில்லி: சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கான விதிகளை வகுப்பதற்கு, மத்திய உள்துறை அமைச்சகம், மேலும், மூன்று மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளது.'அண்டை நாடுகளான, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில், சிறுபான்மையினராக இருந்து, மதரீதியில் பாதிக்கப்பட்ட ஹிந்து, கிறிஸ்துவர், சீக்கியர் உள்ளிட்டோருக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்படும்' என, மத்திய
CAA, Citizenship Amendment Act, Home Ministry, குடியுரிமை சட்ட விதிகள், அவகாசம், உள்துறை அமைச்சகம்

புதுடில்லி: சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கான விதிகளை வகுப்பதற்கு, மத்திய உள்துறை அமைச்சகம், மேலும், மூன்று மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளது.

'அண்டை நாடுகளான, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில், சிறுபான்மையினராக இருந்து, மதரீதியில் பாதிக்கப்பட்ட ஹிந்து, கிறிஸ்துவர், சீக்கியர் உள்ளிட்டோருக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. இதற்காக, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா, பார்லி.,யில், கடந்தாண்டு, டிச.,ல் நிறைவேறியது.

அதைத் தொடர்ந்து, கடந்தாண்டு, டிச., 12ல் இந்த சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். பார்லிமென்ட் விதிகளின்படி, ஒரு சட்டம் நிறைவேறியதில் இருந்து, ஆறு மாதங்களுக்குள், அதற்கான விதிகள் வெளியிடப்பட வேண்டும் அல்லது கூடுதல் அவகாசம் கோர வேண்டும்.

அதன்படி, குடியுரிமை திருத்த சட்டத்துக்கான விதிகளை உருவாக்குவதற்கு, மத்திய உள்துறை அமைச்சகம், மேலும், மூன்று மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளது. இதுதொடர்பாக, உள்துறை அமைச்சகத்தின் துணை சட்ட விதிகளுக்கான பார்லிமென்ட் நிலைக் குழுவுக்கு, உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X