பச்சையம் இழக்கிறது தென்னை: உடுமலை விவசாயிகள் கவலை

Added : ஆக 03, 2020
Share
Advertisement
 பச்சையம் இழக்கிறது தென்னை: உடுமலை விவசாயிகள் கவலை

உடுமலை:உடுமலை அருகே, பருவ நிலை மாற்றத்தால், தென்னை மரங்களில், நோய்த்தாக்குதல் பரவி, ஓலைகளில், பச்சையம் இழந்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், தென்னை சாகுபடி அதிகளவு உள்ளது. பருவ நிலை மாற்றத்தால், மரங்களில், பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்பட்டு, மகசூல் குறைவு, மரங்கள் கருகுவது உட்பட பிரச்னைகள் தொடர்கதையாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, வெள்ளை ஈ தாக்குதலால், ஆயிரக்கணக்கான மரங்கள் பாதித்து, தேங்காய் உற்பத்தி அடியோடு குறைந்தது.இப்பிரச்னையை கட்டுப்படுத்த, பல்வேறு நோய்த்தடுப்பு முறைகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், குடிமங்கலம் வட்டாரம் வல்லக்குண்டாபுரம் சுற்றுப்பகுதி கிராமங்களில், தென்னை மரங்களில், புது வித நோய்த்தாக்குதல் பரவி வருகிறது.நோய்த்தாக்குதல் ஏற்பட்ட மரங்களில், தென்னை ஓலைகள் முற்றிலுமாக பச்சையம் இழந்து, வளர்ச்சி பாதித்துள்ளது; தொடர்ச்சியாக மரங்களில் காய்ப்புத்திறனும் குறைந்துள்ளது.விவசாயிகள் கூறியதாவது: தென்னை ஓலைகளில், சோகை தீ வைத்து எரித்தது போல மாறிய பிறகே, நோய்த்தாக்குதல் பரவுவது தெரிகிறது. ஓலைகளின் உட்புறத்தில் பார்க்கும் போது, ஒரு வித பூச்சிகள், தென்படுகிறது. குறிப்பிட்ட நாட்களுக்குள், நுாற்றுக்கணக்கான மரங்களுக்கு நோய்த்தாக்குதல் பரவி விடுகிறது.கட்டுப்படுத்தும் முறைகள் தெரியாததால், பாதிக்கப்பட்டு வருகிறோம். வேளாண்துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X