கர்நாடகாவில் இதுவரை 57,725 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்| 57,725 people recovered in Karnataka from coronavirus | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கர்நாடகாவில் இதுவரை 57,725 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 03, 2020
Share

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா பாதித்தவர்களில் இதுவரை மொத்தம் 57,725 பேர் மீண்டுள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 42.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் மேலும் 4,077 பேர் குணமடைந்துள்ளனர்.



latest tamil news


இருப்பினும் கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,34,819 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் மேலும் 84 பேர் மாநிலம் முழுவதும் பலியானதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 2,496 ஆக அதிகரித்துள்ளது.

பெங்களூரு நகரில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 2,105 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர். இதையடுத்து நகரில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 59,501 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மருத்துவமனைகளில் அனுமதி கிடைக்காத காரணத்தால், மருத்துவமனை வாசலிலேயே பலர் உயிரிழக்கும் சோகம் ஏற்பட்டுள்ளது.


latest tamil news



30 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இன்றைய தேதியில் அங்கு 74,590 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருவோரில் 638 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X