பொது செய்தி

தமிழ்நாடு

திருமூர்த்தி அணையில் மண் எடுக்க அரிய வாய்ப்பு! விவசாயிகள் விண்ணப்பிக்க அரசு அழைப்பு

Added : ஆக 03, 2020
Share
Advertisement
 திருமூர்த்தி அணையில் மண் எடுக்க அரிய வாய்ப்பு! விவசாயிகள் விண்ணப்பிக்க அரசு அழைப்பு

உடுமலை:திருமூர்த்தி அணையை துார்வாரி, கூடுதல் நீர் சேமிக்கும் வகையிலும், விளை நிலங்களை வளமாக்கும் வகையிலும், விவசாயிகள் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.பி.ஏ.பி., பாசனத்திட்ட தொகுப்பு அணைகளில் ஒன்றான, திருமூர்த்தி அணை, 60 அடி உயரமும், 1.90 டி.எம்.சி., கொள்ளளவும் கொண்டதாகும். பல ஆண்டுகளாக அணை துார்வாரப்படாததால், நீர் தேங்கும் பகுதியில் வண்டல் மண் தேங்கி, நீர் தேக்கும் கொள்ளளவு பெருமளவு குறைந்தது.அணை கட்டும் போது, அணையின் வலது கரை ஓரத்தில், கிழக்குப்பகுதியில் உள்ள கோனக்கரடு, ஜல்லிபட்டி பெருமாள் மலை கரடு, விட்டம்பாலி மலைத்தொடர் பகுதியில், விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட, 300 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம் பயன்படுத்தப்படாமல், வீணாக உள்ளது.அணையை துார்வாரி கூடுதல் நீர் சேமிக்க வேண்டும், என பல ஆண்டுகளாக பி.ஏ.பி., விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், நீர் நிலைகள் துார்வாரி கூடுதல் நீர் சேமிக்கும் வகையிலும், மண் எடுத்து விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை வளப்படுத்திக்கொள்ளவும், தமிழக அரசு அனுமதியளித்தது. அதன் அடிப்படையில், கடந்த ஆண்டு திருமூர்த்தி அணையில், விவசாயிகள் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது.அணையின் கிழக்கு பகுதியில், சர்வே எண் 252, 253ல், 5.06 ெஹக்டேர் பரப்பளவில், 50 ஆயிரத்து, 600 கன மீட்டர் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டு, கடந்தாண்டு ஆக.,மாதம், 30 ஆயிரம் கன மீட்டர் வரை மட்டுமே விவசாயிகள் மண் எடுக்க முடிந்தது.தொடர்ந்து, பருவ மழை துவக்கம் மற்றும் பாசனத்திற்கு நீர் சேகரித்து, வினியோகம் ஆகிய பணிகளால், துார்வாரும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது பாசனம் இல்லாமல், அணை நீர் மட்டம் குறைந்துள்ள நிலையில், நடப்பாண்டும், அணையை ஆழப்படுத்தும் வகையில், விவசாயிகள் மண் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.அதன் அடிப்படையில், கடந்தாண்டு நிர்ணயிக்கப்பட்ட அளவில், எடுத்தது போக, மீதம் உள்ள வண்டல் மண் எடுத்துக்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறியதாவது:திருமூர்த்தி அணையில், கடந்தாண்டு எடுத்தது போக, மீதம் உள்ள 12 ஆயிரம் கன மீட்டர் அளவிற்கு, நடப்பாண்டு மண் எடுத்துக்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கர் நன்செய் நிலமாக இருந்தால், 75 கன மீட்டர் (25 டிராக்டர்), புன்செய் நிலமாக இருந்தால், 90 கன மீட்டர் (30 டிராக்டர்) மற்றும் வீட்டு உபயோகமாக இருந்தால், 30 கன மீட்டர் (5 லாரி லோடு) மண் எடுத்துக்கொள்ளலாம்.மண் எடுக்க விருப்பம் உள்ள விவசாயிகள், வருவாய்த்துறையில், நிலத்தின் சிட்டா, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X