பொது செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைனில்' வினாடி-வினா மாணவர்களுக்கு அழைப்பு

Added : ஆக 03, 2020
Share
Advertisement

உடுமலை:சுதந்திர தினத்தையொட்டி, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் 'ஆன்லைன்' போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களிடம் நாட்டுப்பற்றை வளர்க்கும் நோக்கத்தில், சுதந்திர தினத்தையொட்டி, மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த போட்டியை அறிவித்துள்ளது. 'தற்சார்பு இந்தியா- சுதந்திர இந்தியா' என்ற கருத்தை மையப்படுத்தி, mygov இணையதளத்தில் வினாடி வினா போட்டி ஜூலை 29ம் தேதி முதல், ஆக., 10ம் தேதி வரை நடக்கிறது. பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விருப்பமுள்ள பொதுமக்களும், இதில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் ஒருவர் ஒருமுறை மட்டுமே பங்கேற்க முடியும்.போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசாக, 25 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக, 15 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக, பத்தாயிரம் ரூபாய், ஆறுதல் பரிசாக ஏழு பேருக்கு, தலா, ஐந்தாயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.14 வயதுக்கு மேற்பட்டவர்கள் இப்போட்டியில் பங்கேற்க தகுதி பெறுகின்றனர். போட்டி, https://quiz.mygov.in/quiz/aatmanirbhar--bharat---swatantra-bharat-quiz/ என்ற இணையதளத்தில் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X