இந்தியா

ஆரோவில்லில் கடல் அரிப்பினால் லாட்ஜ், ஓட்டல்களுக்கு அபாயம்

Added : ஆக 03, 2020
Share
Advertisement

புதுச்சேரி : ஆரோவில் பகுதியில் கடுமையான கடல் அரிப்பால், கடற்கரையோரம் உள்ள லாட்ஜ், கெஸ்ட் அவுஸ், ஓட்டல் உரிமையாளர்கள் நிலைகுலைந்து உள்ளனர்.

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான தந்திராயன்குப்பம், பொம்மையார்பாளையம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில், சுனாமிக்கு பின், கடல் நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு, கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. கடல் அரிப்பை தடுக்க, தந்திராயன் குப்பத்தில் மட்டும் துாண்டில் முள் வளைவு முறையில் கருங்கற்கள் கொட்டப்பட்டுள்ளது. மற்ற கிராமங்களில் கருங்கல் மட்டுமே கொட்டியுள்ளனர்.வெளிநாட்டவர்கள், சுற்றுலா பயணிகள் குவியும் ஆரோவில் கடற்கரையில், கடந்த சில மாதங்களாக, கடுமையான கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

கரையோரம் இருந்த கட்டடங்கள் சரிந்து விழுந்து வருகிறது.தனியார் ஓட்டல் கட்டடங்களும் கடல் அரிப்பில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றன. இதுவரை 20க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், கெஸ்ட் அவுஸ்கள், லாட்ஜ்கள் கடலில் அடித்து செல்லப்பட்டு விட்டன.எஞ்சியுள்ள லாட்ஜ், கெஸ்ட் அவுஸ்கள், ஓட்டல்களுக்கும் கடல் அரிப்பால் ஆபத்து உள்ளதால் அதன் உரிமையாளர்கள் நிலைகுலைந்து போய் உள்ளனர்.அவர்கள் கூறுகையில், 'சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக அதிகளவில் முதலீடு செய்து கடற்கரையையொட்டி லாட்ஜ்கள் அமைத்தோம்.
ஆனால் அதிகரித்து வரும் கடல் அரிப்பு அனைத்தையும் தலைகீழாக புரட்டி போட்டு, எங்களின் முதலீட்டை மோசம் செய்து வருகிறது. இதே நிலை நீடித்தால், ஓரிரு மாதங்களில் சின்ன முதலியார்சாவடி, பெரியமுதலியார்சாவடி கடற்கரையில் உள்ள விடுதிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு விடும். அதனால் மாற்று இடம் தேடுகின்றோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X