பொது செய்தி

தமிழ்நாடு

அருவியில் சீரான நீர்வரத்து ரசிப்பதற்கு அனுமதியில்லை

Added : ஆக 03, 2020
Share
Advertisement
 அருவியில் சீரான நீர்வரத்து ரசிப்பதற்கு அனுமதியில்லை

உடுமலை:பருவ மழை தீவிரமடைந்துள்ளதால்,திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவிக்குநீர்வரத்து அதிகரித்துள்ளது.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், 960 மீட்டர் உயரத்தில், பஞ்சலிங்க அருவி உள்ளது. மலைப்பகுதிகளில் உருவாகும் காட்டாறுகள் இணைந்து, பஞ்சலிங்க அருவியாக விழுகிறது. மழை பொழிவு இல்லாததால், நான்கு மாதமாக போதிய நீர்வரத்து இல்லை.தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், அருவியில் நீர் கொட்டுகிறது. பசுமை சூழ்ந்த மலைப்பகுதியில், மழையுடன், அருவியும் கொட்டுவதால், ரம்மியமாக காட்சியளிக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லாததால், அருவி பகுதி அமைதியாக காணப்படுகிறது.மக்கள் வருகை இல்லாததால், பிளாஸ்டிக் கவர்கள் உட்பட கழிவுகள் வீசப்படாமல், அருவியின் சுற்றுப்பகுதி துாய்மையாக மாறியுள்ளது. மக்கள் தரும் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகளும், வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X