பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லூரியில் சேர ஆர்வம்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

Added : ஆக 03, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பாரதியார் பல்கலை கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நாளை 4ம் தேதி கடைசி நாளாகும்.பொள்ளாச்சி பாரதியார் பல்கலை., கலை, அறிவியல் கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில், விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.கல்லுாரி முதல்வர் (பொ) கிருஷ்ணராஜ் கூறியதாவது:மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை பாரதியார் பல்கலை கழகத்தின், www.b---u.ac.in இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்.சி., கணிதம், பி.பி.ஏ., பி.காம்., சி.ஏ., பி.காம்., தொழில்முறை கணக்குப்பதிவியல் (புரோபசனல் அக்கவுண்டிங்) ஆகிய பாடங்களுக்குரிய விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.இதுவரை, 703 விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளன. அதில், மொத்தம், 582 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, நாளை (4ம் தேதி) இறுதி நாளாகும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மாலை, 3:00 மணிக்குள் அனுப்ப வேண்டும். நேரடியாக வர வேண்டாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் அனைத்து சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, கல்லுாரியின் buascpollachi@gmail.com என்ற இ-மெயிலுக்கு அனுப்பலாம்.முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை, விரைவு அல்லது பதிவு தபாலில், முதல்வர், பாரதியார் பல்கலை கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, மகாலிங்கபுரம், பொள்ளாச்சி, 642002 என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு, 04259 220335 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X