பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வு வாகன ஓட்டிக்கு 'அட்வைஸ்'

Added : ஆக 03, 2020
Share
Advertisement

அவிநாசி:அவிநாசி போக்குவரத்து போலீசார் சார்பில், வாகன ஓட்டிகளுக்கு, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அவிநாசி, புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், வாகன ஓட்டிகளுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.இதில், உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து கொள்ள வேண்டும். சளி, காய்ச்சல் இருக்கும் பட்சத்தில், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். தேவையின்றி வெளி தொடர்பை குறைத்து கொள்ள வேண்டும். பயணத்தின் போது, முக கவசம் அணிய வேண்டும்.கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, அரசு வழங்கும் செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என விளக்கப்பட்டிருந்தது.டி.எஸ்.பி., பாஸ்கரன் தலைமை வகித்தார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் ஏற்பாடுகளைசெய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X