பொது செய்தி

தமிழ்நாடு

புறக்கடை அபிவிருத்தித் திட்டத்தில் ஆடுகள் வளர்க்க விண்ணப்பங்கள்

Added : ஆக 03, 2020
Share
Advertisement

விழுப்புரம் : ஊரக புறக்கடை அபிவிருத்தி திட்டத்தில் ஆடுகள் வளர்க்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு;தமிழக அரசு தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கான ஊரக புறக்கடை அபிவிருத்தி திட்டத்தில் ஒரு பயனாளிக்கு 10 பெண் ஆடுகளும், ஒரு ஆண் ஆடும் வழங்க ஆணையிட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. ஒரு பயனாளிக்கு ஒரு ஆண் செம்மறி ஆடு, வெள்ளாடு கொள்முதல் செய்ய ரூ.6000 மற்றும் 10 பெண் செம்மறி ஆடு, வெள்ளாடு கொள்முதல் செய்ய ரூ.50,000 வழங்கப்படும். ஆடுகளை மூன்று ஆண்டுகளுக்கு காப்பீடு செய்ய 7.5 சதவீதம் ரூ.4200- வழங்கப்படும்.

பயனாளிகளுக்கு மருந்துகள், ஊட்டச்சத்து கலவை, குடற்புழு நீக்கம், போக்குவரத்து கட்டணம் மற்றும் சில்லறை செலவினங்கள் ஆகியவற்றை ஈடுகட்ட ரூ.5800 மூன்று தவணைகளில் வழங்கப்படும்.இத்திட்டத்தில் ஆடு வளர்ப்பில் விருப்பமுள்ள நிலமற்ற, சிறு மற்றும் குறு விவசாயிகள் பயனாளிகளாக தேர்வு செய்யப்படுவர். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அங்கத்தினர்கள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பெண் விவசாயிகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் மற்றும் விதவைகள் ஆகியவர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 30 சதவீத ஆதிதிராவிட மற்றும் ஆதி திராவிட பழங்குடியினர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட வேண்டும்.

விருப்பம் உள்ள பயனாளிகள் விழுப்புரம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலகத்திலும் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் வரும் 7ம் தேதி-க்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். மண்டல இணை இயக்குநரின் இசைவுடன் சம்பந்தப்பட்ட கலெக்டரால் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X