பொது செய்தி

தமிழ்நாடு

கீழ்எடையாளத்தில் உழவுப்பணி

Added : ஆக 03, 2020
Share
Advertisement

திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த கீழ்எடையாளம் கிராமத்தில் 25 ஏக்கர் தரிசு நிலங்களில் உழவுப் பணி துவக்க விழா நடந்தது.

விழுப்புரம் வேளாண்மை இணை இயக்குநர் ராஜசேகர் வரவேற்றார். வேளாண்மை இயக்குநர் தட்சணாமூர்த்தி பணியை துவக்கி வைத்து, விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கி, பேசுகையில், 'உணவு உற்பத்தியை அதிகரித்து தன்னிறைவை எட்ட வேண்டும். இதற்காக, தரிசாக உள்ள நிலங்களை மேம்பாடுத்தி, சாகுபடி செய்யும் நிலைக்கு கொண்டு வர ஹெக்டருக்கு 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் துவங்கப்பட்டுள்ளது.

இதில் மாவட்டத்தில் பயறு வகை பயிர்கள் 150 ஹெக்டரிலும், சிறுதானியங்கள் 60 ஹெக்டரிலும், வேர்க்கடலை 60 ஹெக்டரிலும், எள் 75 ஹெக்டரிலும் செயல்படுத்தப்பட உள்ளது' என்றார். வேளாண்மை துணை இயக்குநர்கள் கென்னடி ஜெபக்குமார், செல்வ பாண்டியன், குமாரி ஆனந்தி, பெரியசாமி, வேளாண்மை உதவி இயக்குநர்கள் கருணாநிதி, ரவிச்சந்திரன், வேளாண்மை அலுவலர்கள் பிரபுசங்கர், கிருத்திகா, துணை வேளாண்மை அலுவலர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X