அரிசி ஆலை உரிமையாளர்கள்நலச்சங்க ஆலோசனைக்கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரிசி ஆலை உரிமையாளர்கள்நலச்சங்க ஆலோசனைக்கூட்டம்

Added : ஆக 03, 2020
Share

திண்டிவனம் : அரிசி ஆலையை மீட்டு எடுக்க கடன் நிவாரணச்சட்டம் நிறைவேற்ற வேண்டும் என திண்டிவனம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல்,அரிசி வியாபாரிகள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திண்டிவனம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலில் நலிந்தோரை மேம்படுத்துதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ராகவன் பங்கேற்று பேசினார். பா.ஜ., மாநிலசெயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர், தொழிற்நுட்ப பிரிவு மாநில அமைப்பாளர் பிரபு சண்முகம், சங்க தலைவர் கண்ணன்,செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:விவசாயம் சார்ந்த தொழிலான அரிசி ஆலை தொழில், தற்போது அழிந்து வருகிறது.

எனவே அரிசி ஆலையை மீட்டு எடுத்து, கடன் நிவாரணச்சட்டம் நிறைவேற்ற வேண்டும். அரிசி ஆலை (என்பிஏ) கணக்கு என்பதால், ஒரு ஆண்டு காலத்திற்கு எங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்.அரிசி ஆலை நடைமுறை சிக்கல்களை தீர்ப்பதற்கும், தொழில் மேம்பாட்டிற்கும் தனி நலவாரியம் அமைக்க வேண்டும். இந்த தீர்மான மனுக்கள், பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ராகவனிடம் அளிக்கப்பட்டது. அரிசி ஆலைக்கு கடனின் வட்டி விகிதம் 4 சதவீதமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X