பொது செய்தி

தமிழ்நாடு

அன்னியூர் ஏரி மராமத்துப் பணி பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

Added : ஆக 03, 2020
Share
Advertisement

விழுப்புரம் : அன்னியூர் கிராம ஏரி குடிமராமத்து பணி தொய்வடைந்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் அடுத்த அன்னியூர் கிராமத்தில் உள்ள ஏரி மூலம் 900 ஏக்கர் பரப்பளவிலான விலை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. தற்போது, ஏரிக்கு வரும் வரத்து வாய்க்கால் துார்ந்ததால் தண்ணீர் அளவு குறைந்தது.இதையடுத்து கிராம மக்கள் கோரிக்கையை யேற்று, 44 லட்சம் ரூபாய் செலவில், ஏரி குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், 25 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது.இந்தப் பணிகளை முழுமையாக செய்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், அன்னியூர் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.

இதனையடுத்து, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவஹர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், அன்னியூர் ஏரி சீரமைப்பு பணியை ஆய்வு செய்தனர். அப்போது, பொதுமக்கள் தரப்பில் கூறிய குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்ய உதவி செயற்பொறியாளர் அன்பரசு, உதவி பொறியாளர்கள் ஞானசேகர், கனகராஜ், பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X