குடிநீர் தட்டுப்பாடு ராமநாதபுரம் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ...

Added : ஆக 03, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் புதிய அரசு மருத்துவக்கல்லுாரி கட்டடப் பணிகளை மார்ச்சில் முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.மாவட்ட தலைமை மருத்துவமனை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது. டீன் நியமிக்கப்பட்டு நிர்வகித்து வருகிறார்.

கொரோனா பரவல் தடுப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவால் இங்கு புறநோயாளிகள் பிரிவு செயல்படவில்லை. தற்போது மூன்று கொரோனா சிறப்பு வார்டுகள் செயல்படுகின்றன. 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு மருத்துவப் பிரிவு, டயாலிசிஸ் பிரிவு உள்ளிட்ட குறிப்பிட்ட சில பிரிவுகள் மட்டும் செயல்படுகிறது.

மாவட்டம் முழுவதும்இருந்து கொரோனா நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகப்பேறு பிரிவில் குறைந்தது 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.மகப்பேறு மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளவர்கள், நோயாளிகளுடன் இருப்போருக்கு மருத்துவமனைக்குள் எந்த குடிநீர் வசதியும் செய்யப் படவில்லை. மருத்துவமனை நுழைவு வாசலில் ஒரு குடிநீர் தொட்டி, பிரசவ வார்டு அருகில் ஒரு தொட்டி அமைத்து குடிநீர் வழங்கினர்.

தற்போது அதில் தண்ணீர் இல்லை.மேலும் முன்னாள் எம்.பி., அன்வர்ராஜா தொகுதி நிதியுதவியில் அமைத்த நவீன குடிநீர் வழங்கும் மையமும் செயல்படவில்லை. இதனால் நோயாளிகள்,உடன் வந்தவர்கள் தண்ணீருக்காக மருத்துவமனைக்கு வெளியே செல்கின்றனர்.எனவே, மருத்துவமனை வளாகத்திற்குள் போதிய குடிநீர் வசதி செய்ய மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X