பொது செய்தி

தமிழ்நாடு

கென்னடி மெட்ரிக் பள்ளிபிளஸ் 1 தேர்வில் சாதனை

Added : ஆக 03, 2020
Share
Advertisement

திண்டிவனம் : ரெட்டணை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனைபடைத்துள்ளது.ரெட்டணை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 96 மாணவர்கள் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதினர்.

இதில், 95 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பள்ளி அளவில் 555 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், 542 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், 539மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனர்.6 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேலும், 50 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல்பெற்றுள்ள்ளனர்.இப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் 556, 551, 542 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமைசேர்த்துள்ளனர். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், இப்பள்ளி மயிலம் ஒன்றியத்தில் முதன்மை மதிப்பெண் பெற்ற பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் தேர்ச்சிக்காக உழைத்த பள்ளி ஆசிரியர்களை, பள்ளி நிர்வாகி சண்முகம், செயலாளர் சந்தோஷ், நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன் சண்முகம் ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X