சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனையில் மது குடித்த வாலிபர்களுக்கு நுாதன தண்டனை

Added : ஆக 03, 2020
Share
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் அருகே அரசு கால்நடை மருத்துவமனை வளாகத்தில் மது குடித்த வாலிபர்களுக்கு, போலீசார் நுாதன தண்டனை வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் அடுத்த எருமனந்தாங்கல் கிராமத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் வாலிபர்கள் சிலர் நேற்று மது குடித்தனர். இது குறித்து தகவலறிந்த விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், அங்கு விரைந்து சென்றார்.அங்கு மது குடித்த வாலிபர் களுக்கு அறிவுரை வழங்கி, அங்கிருந்த மது பாட்டில் கழிவுகள் மற்றும் குப்பைகளை அள்ளுமாறு நுாதன தண்டனை வழங்கினார். இதையடுத்து, அந்த இடத்தை வாலிபர்கள் சுத்தம் செய்தனர். பின், இனி வரும் காலங்களில் மருத்துவமனை வளாகத்தில் மது குடிக்க மாட்டோம் என வாலிபர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

மீண்டும் அங்கு மது குடித்தால் வழக்கு பதிந்து, சிறையில் அடைக்கப்படுவார்கள் என சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்தார்.இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X