பொது செய்தி

இந்தியா

ராமர் கோவிலுக்கு ஆக.,5ல் பூமிபூஜை; ஜொலிக்கிறது அயோத்தி

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 03, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Ayodhya, decked, Ram Temple, Bhoomi Pujan,அயோத்தி, ராமர் கோவில், பூமிபூஜை

அயோத்தி: ராமர் கோவில் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவை ஒட்டி அயோத்தி நகரமே வண்ண விளக்குகள், தோரணங்களால் ஜொலிக்கிறது.

உத்தர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அனுமதியளித்தது. கோவில் கட்டுவதற்காக 'ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா' என்ற பெயரில் அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை மறுதினம் நடக்கிறது. இதையொட்டி மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வண்ண விளக்கு களாலும் தோரணங்களாலும் ஜொலிக்கிறது.

விழாவில் பிரதமர் மோடி உட்பட 200 வி.வி.ஐ.பி.க்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோவில் கருவறை அமையும் இடத்தில் 40 கிலோ எடையுள்ள வெள்ளி செங்கல்லை வைத்து பகல் 12:15 மணியளவில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடியுடன் மேடையில் நான்கு பேர் மட்டுமே அமர அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பா.ஜ. மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை அறக்கட்டளை நிர்வாகிகள் அலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தனர். இருவரும் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் பங்கேற்க உள்ளனர்.

மஹாராஷ்டிரா முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவுக்கு இதுவரை அழைப்பு அனுப்பப்படவில்லை. 'ராமர் கோவில் கட்டுவதற்காக எங்களது ரத்தத்தையும் சதையையும் நாங்கள் கொடுத்துள்ளோம். அதனால் உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும்' என சிவசேனா கூறியுள்ளது.


நிகழ்ச்சிகள் இன்று துவக்கம்


பூமி பூஜைக்கான நிகழ்ச்சிகள் அயோத்தியில் இன்று காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. இதற்காக வாரணாசியில் இருந்து வேதவிற்பன்னர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசம் முழுதும் கோயில்களில் நாளையும், நாளை மறுதினமும் சிறப்பு பூஜைகளுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
03-ஆக-202023:51:11 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை இந்திய பொருளாதாரம் பின்னடைவுல இருக்கே ? அத சரி செஞ்சுட்டு கோயில் கட்டலாமே ?
Rate this:
Cancel
03-ஆக-202023:28:16 IST Report Abuse
நக்கல் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி... இது போல் இன்னும் பல கோவில்கள் கட்டப்படவேண்டும்... பிஜேபி, RSS ஆட்சி நிலைத்திருக்கவேண்டும்... இந்த நாட்டில் தேசவிரோதிகள் முற்றிலும் ஒழிந்து தேசத்தை நேசிப்பவர்கள் மட்டுமே இருக்கவேண்டும்... அதற்கு ராமர் வழி செய்வார்... ஜெய் ஸ்ரீ ராம்!!
Rate this:
Cancel
Arasu - OOty,இந்தியா
03-ஆக-202013:16:22 IST Report Abuse
Arasu பொருளாதாரம் இங்கு பல் இளிக்கிறது.....அது பற்றி யாருக்கும் தெரியவில்லை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X