பொது செய்தி

இந்தியா

பயணியருக்கு வழிமுறைகள்: மத்திய உள்துறை அறிவிப்பு

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 03, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
health ministry, latest rules, travel, India, abroad, மத்திய உள்துறை, அறிவிப்பு, வழிமுறைகள்

புதுடில்லி: வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணியருக்கான புதிய வழிமுறைகளை, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, சர்வதேச விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, ஆகஸ்ட், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர, 'வந்தே பாரத்' திட்டத்தின்கீழ் இயக்கப்படும் சிறப்பு விமானங்களுக்கும், சரக்கு விமானங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சர்வதேச விமானங்கள் மூலம், இந்தியா வரும் பயணியருக்கான புதிய வழிமுறைகளை, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. இந்த புதிய வழிமுறைகள், ஆகஸ்ட், 8ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, இந்தியா வரும் பயணியர், 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர். முதல் ஏழு நாட்கள், தனிமைப்படுத்தும் மையத்திலும்; அடுத்த ஏழு நாட்கள், வீட்டிலும் தனித்திருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிபடுத்தும் பரிசோதனை சான்றிதழை சமர்ப்பித்தால், தனிமைப்படுத்தும் மையத்தில் தங்குவதில் இருந்து, அந்நபர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

இந்தியாவுக்கு புறப்படுவதற்கு, 72 மணி நேரத்திற்கு முன்பாக, டில்லி விமான நிலைய இணையதளத்தில், இதற்கான சுய ஒப்புதல் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான வழிமுறைகளை, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், தனியாக வகுத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Loganathan - Coimbatore,இந்தியா
03-ஆக-202023:33:56 IST Report Abuse
G.Loganathan ஆக மொத்தம் இந்தியாவில் கொரோனா பெயரில் கொள்ளை, உடல் உறுப்புகள் கொள்ளை அரங்கேறுவதாக செய்திகள். 2019 நவம்பரில் இருவழி பயணச்சீட்டுடன் அமெரிக்கா சென்றவர்கள் திரும்பி வர வழியின்றி தவிக்கிறார்கள். ஏர் இந்தியா என்பது அரசுக்கு சொந்தமான - மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் நிறுவனம் இந்த ஆபத்தான காலத்தில் மக்களுக்கு சேவை செய்வதை விடுத்து இரண்டு அல்லது மூன்று மடங்கு விலை பயணச்சீட்டுக்கு விதித்துள்ளது. இருவழி பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு ஏதாவது அறிவிப்பு உண்டா?. மாண்புமிகு அமைச்சர் திரு.பூரி அவர்களுக்கு எங்கோ யாரோ மசாலா கொடுக்கிறார்களா? மற்ற வெளி நாட்டு விமான நிறுவனங்கள் சாதாரண போக்குவரத்தை நடத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் இன்னும் "வந்தே பாரத்" என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். இந்த லட்சணத்தில் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்கப்போகிறாராம். அய்யா மாண்புமிகு அமைச்சர் திரு.பூரி அவர்களே தமிழில் ஒரு சொல் உள்ளது. "கேப்பையில் நெய் வடிகிறது என்றானாம், கேட்பவனோ நான் ஒன்றும் கேனையன் இல்லை என்றானாம்". இந்த இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு சேவை செய்யுங்கள். தனிமைப்படுத்துகிறோம் என்ற பெயரில் பயனிகளை கட்டாயப்படுத்தி விடுதிகளுக்கு அனுப்பி அடிக்கு கொள்ளை எவ்வளவு?. பயணியர் தனிமைபடுத்தப்படும் விடுதிகள் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டதா?. அப்படிப்பட்ட விடுதிகளில் அவசர கால உதவிக்கு மருத்துவர் உண்டா?. ஆனால் பயணியர்களிடம் பணம் மட்டும் கொள்ளை அடிக்கப்படுகிறதாக சென்றவர்கள் புலம்பி சாபமிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
03-ஆக-202022:49:40 IST Report Abuse
தல புராணம் இன்னும் சிறப்பாக, சற்று குறைந்த கட்டணத்தில் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் பயணிகளை கொண்டு வர, கொண்டு செல்ல தயாராக உள்ளன. ஆனால் அனுமதி தராமல் இழுத்தடிக்கும் கேவலமான இந்திய அரசு..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
03-ஆக-202022:47:48 IST Report Abuse
தல புராணம் வந்தே பாரத் இல்லை.. இது நொந்தே பாரத்.. நூடுல்ஸ் பாரத்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X