அமைச்சர்களை ஓரங்கட்டிய மோடி

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 03, 2020 | கருத்துகள் (31)
Share
Advertisement

புதிய கல்வி கொள்கையை, சமீபத்தில் அறிவித்தது, மத்திய அரசு. இந்த புதிய கொள்கை, 2016லிருந்து கிடப்பிலேயே இருந்தது. மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர்கள், இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், மோடி இதில் ஆர்வமாக இருந்தார்.



latest tamil news


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கஸ்துாரிரங்கன் தலைமையிலான குழு, இந்த கொள்கைக்கு முழு வடிவம் கொடுத்து, இறுதி செய்தது. இந்த விவகாரத்தில், மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியாலை, மோடி கண்டுகொள்ளவே இல்லையாம். கொள்கைக்கு, இறுதி வடிவம் கொடுத்ததில், துறை அமைச்சரின் பங்கு எதுவுமே கிடையாது. இவருக்கு முன், இந்த துறை அமைச்சராக இருந்த, பிரகாஷ் ஜாவடேகருக்கும், இதில் பங்கு இல்லை.


latest tamil news



இந்த இரண்டு அமைச்சர்களும், புதிய கல்வி கொள்கையை கொண்டு வர, கால தாமதம் செய்கின்றனர் என்பதால், இந்த வேலையை, மனித வள மேம்பாட்டு துறை செயலரும், சீனியர் ஐ.ஏ.எஸ்.,அதிகாரியுமான அமித் கரேவிடம் ஒப்படைத்தார் மோடி. இந்த விஷயத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்ட கரே, ஜார்க்கண்ட் கேடரை சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி. இப்போது கல்வித் துறை என பெயர் மாற்றப்பட்டுள்ள மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் என, இரண்டு துறைகளுக்கும் செயலராக பணியாற்றுகிறார், கரே. அதிரடியாக வேலை செய்வதில், கில்லாடி.

பீஹாரில் கலெக்டராக இருந்த போது, லாலு பிரசாத்திற்கு எதிராக, மாட்டு தீவன ஊழலை, முதலில் வெளிக் கொண்டு வந்தவர், இந்த கரே. இதனால் இப்போது தேர்த லில் போட்டியிட முடியாமல் சிறையில் காலம் கழித்து வருகிறார், லாலு. பிரதமரின் கண் அசைவுக்கு ஏற்ப, உடனே வேலையில் இறங்கிய கரே, புதிய கல்வி கொள்கைக்கு, இறுதி வடிவம் கொடுத்து, அதை வெளியிடவும் வைத்தார். இவரையும், இவருடைய திறமையையும், மோடிக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான், இந்த அதிகாரியை வைத்துக் கொண்டு, அமைச்சர்களை ஓரம் கட்டி, தான் விரும்பிய புதிய கல்வி கொள்கையை கொண்டுவந்து விட்டார், மோடி.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஆக-202017:37:20 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) எந்த மாநிலத்திலும் எதிர்ப்பு இருக்காது ஆனால் தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு இருக்கும் ஏன் என்றால் இங்கு கல்வி (அரசியல் ) தந்தைகள் அதிகம்.
Rate this:
Cancel
03-ஆக-202017:26:42 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆதரவாய் இருக்கும் இந்த புதிய கல்வி கொள்கையை தனியார் பள்ளி முதலாளிகள் எதிர்க்கதான் செய்வர்
Rate this:
Cancel
அப்பாவி - coimbatore,இந்தியா
03-ஆக-202014:26:39 IST Report Abuse
அப்பாவி மோடி அமைச்சரவையில் அமைச்சர்கள் எல்லாம் பொம்மைகள் என்பது நன்கு தெரியும். "புதிய கல்வி கொள்கையில் மோடி இதில் ஆர்வமாக இருந்தார்." இந்திய மக்களை கசக்கி பிழிவதில் மோடிக்கு அலாதி சுகம் என்பது அவரது கடந்த கால நடவடிக்கையில் தெளிவாக தெரியும். "
Rate this:
Rajan - Alloliya,இந்தியா
04-ஆக-202009:25:39 IST Report Abuse
Rajanமூரக்ஸ் பொங்கி சாகிறான் பாவம் மோடி ஆட்சியில் பிச்சை எடுத்து பொழைக்கிறான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X