பொது செய்தி

இந்தியா

நடிகர் தற்கொலையில் இழுக்கப்படும் அரசியல்வாதி

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 03, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement

பீஹாரை சேர்ந்த, ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில், ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார். ஒரு சாதாரண தற்கொலை தான் என முதலில் சொல்லப்பட்ட இந்த விவகாரம், இப்போது மஹாராஷ்டிரா மற்றும் பீஹார் அரசியலை கலக்கிக் கொண்டிருக்கிறது.latest tamil newsஇவருடன் நெருக்கமாக, ஒன்றாக வாழ்ந்து கொண்டிருந்த, ஹிந்தி நடிகை ரியா சக்ரவர்த்தி மீது, பாட்னா போலீசில் புகார் அளித்துள்ளார் சுஷாந்தின் அப்பா. 'என் மகன் தற்கொலைக்கு காரணம், இந்த நடிகை தான். சுஷாந்தின் கோடிக்கணக்கான பணத்தை அவர் சுருட்டிவிட்டார்' என்பது, புகாரின் சாராம்சம்.சுஷாந்தின் கோடிக்கணக்கான பணம் எங்கே போனது என, அமலாக்கத் துறையும் விசாரணையில் இறங்கியுள்ளது.


latest tamil news
இதற்கிடையே, 'பாட்னாவில் தொடரப்பட்டுள்ள வழக்கை, மும்பைக்கு மாற்ற வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார், நடிகை ரியா. சுஷாந்தின் அப்பாவிற்கு ஆதரவாக, பீஹார் அரசும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மஹாராஷ்டிர அரசும், இந்த வழக்கில், தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என, கோரியுள்ளது.

'சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம், ஒரு இளம் அரசியல்வாதி' என, டில்லி மற்றும் மும்பை அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. நடிகை ரியாவிற்கும், அந்த அரசியல்வாதிக்கும் இருந்த தொடர்பை, சுஷாந்த் எதிர்த்தார் என்கின்றனர். தற்கொலைக்கு முன்தினம், ரியா நடத்திய விருந்தில், சுஷாந்த் கலந்து கொண்டார். விருந்துக்கு, அந்த அரசியல்வாதியும் வந்தாராம். இதனால் வெறுப்படைந்த சுஷாந்த், ரியாவுடன் சண்டை போட்டு, அங்கிருந்து வெளியேறிவிட்டாராம். மறுநாள், சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார்.

அந்த இளம் அரசியல்வாதியின் தந்தையும், மஹாராஷ்டிராவில் மிகப் பெரிய அரசியல் புள்ளியாம். விருந்து நடந்த இடத்தில் இருந்த, 'சிசிடிவி' கேமராக்கள் வேலை செய்யவில்லையாம். இது பெரும் பிரச்னையை கிளப்பியுள்ளது. 'விரைவில் இந்த இளம் அரசியல்வாதியின் பெயர் வெளியாகும். இது மஹாராஷ்டிர, சிவசேனா - காங்., கூட்டணி அரசுக்கு பிரச்னையை ஏற்படுத்தும்' என, சொல்லப்படுகிறது.

இன்னொரு பக்கம், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், இந்த வழக்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். காரணம், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஜாதிக்கு, அதிக ஓட்டு வங்கி, பீஹாரில் உள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில், பீஹாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், இந்த வழக்கில் அமலாக்க துறையும் விசாரணை செய்ய வேண்டும் என, டில்லிக்கு நிதிஷ் குமார் சொன்னதும், அது உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு நடிகரின் தற்கொலை, இரு மாநிலங்களில் அரசியலையே மாற்றிக் கொண்டிருக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
03-ஆக-202016:56:23 IST Report Abuse
mathimandhiri ஆக கூடி ஜொள்ளு பார்ட்டி வாரிசு தான் முதல்வர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்பது மகா ராஷ்ட்ர மாநிலக் கட்சியிலும் எழுதப் படாத விதி போல இருக்கிறது. அங்கு, பாலிவுட்டை, மும்மூர்த்திகளாக விளங்கும் பெரிய நடிகர்கள் மூலம் நிழலுலக தாதாக்கள் ஆட்டி வைத்து வருகின்றனர். ஐந்தாண்டுகளுக்கு முன் மஹாராஷ்ட்ரா அரசியலில் எட்டி வைக்கப் பட்டிருந்த அவர்கள் இப்போது அரசியலிலும் நுழைந்து விட்டதையே இது காட்டுகிறது போல் உள்ளது. இதை எல்லாம் ஆட்சியைக் கைப் பற்றுவதிலேயே வெறியாய் இருந்தவர்கள் முன்பே உணர்ந்திருக்க வேண்டும். பதவி வெறி பல முக்கிய விஷயங்களை யோசிக்க விடாமல் கண்ணைக் கட்டி விட்டது. என்ன செய்வது. எனவே கட்சியின் அடிப்படை கொள்கை, நோக்கம், சித்தாந்தம் இவை எல்லாம் ஒரு நொடியில் அடி பட்டுப் போனது......மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
03-ஆக-202016:10:17 IST Report Abuse
Natarajan Ramanathan இங்க ஒரு வாரிசு நடிகன் ...
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
03-ஆக-202015:31:12 IST Report Abuse
r.sundaram தாக்கரே வசமாக மாட்டிக்கொண்டார் போலிருக்கிறது. மும்பை போலீஸ் வழக்கை இழுத்தமூட முயற்ச்சிக்கிறதாமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X