சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

கந்த சஷ்டி விவகாரத்தில் உளவுத் துறை தந்த அறிக்கை

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 03, 2020 | கருத்துகள் (70) | |
Advertisement
கந்த சஷ்டி கவசத்தை கேவலப்படுத்திய கருப்பர் கூட்டத்தின் முக்கிய புள்ளி, இப்போது சிறையில் உள்ளார். இது தொடர்பாக, தமிழக போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.கந்த சஷ்டி கவசத்தை கேலி செய்த இந்த கூட்டம் குறித்து, ஓர் அறிக்கை வேண்டும் என, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உளவுத் துறையிடம் கேட்டிருந்தாராம்.களத்தில் இறங்கிய மத்திய அரசின் உளவுத் துறை, கருப்பர் கூட்டம்

கந்த சஷ்டி கவசத்தை கேவலப்படுத்திய கருப்பர் கூட்டத்தின் முக்கிய புள்ளி, இப்போது சிறையில் உள்ளார். இது தொடர்பாக, தமிழக போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.கந்த சஷ்டி கவசத்தை கேலி செய்த இந்த கூட்டம் குறித்து, ஓர் அறிக்கை வேண்டும் என, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உளவுத் துறையிடம் கேட்டிருந்தாராம்.latest tamil newsகளத்தில் இறங்கிய மத்திய அரசின் உளவுத் துறை, கருப்பர் கூட்டம் தொடர்பான முழு விபரங்களை திரட்டி, ரகசிய அறிக்கையை அமைச்சர் அமித் ஷாவிடம் அளித்துள்ளது.


latest tamil newsகருப்பர் கூட்டத்திற்கு பண ரீதியாக யார் உதவி வருகின்றனர்; இந்த அமைப்பின் பின்னால் இருப்பவர்கள் யார்; எந்த அரசியல் கட்சிகள், இந்த கூட்டத்துடன் தொடர்பு வைத்துள்ளனர் என, அனைத்து விபரங்களையும், உளவுத் துறை திரட்டியுள்ளதாம். இதை வைத்து, தமிழக அரசியலில் பிரசாரத்தை மேற்கொள்ள, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

தி.மு.க.,வின் கடவுள் எதிர்ப்பு நிலை; கருப்பர் கூட்டத்திற்கு எதிராக, அதிகம் பேசாமல், அமைதி காத்தது என, பல விஷயங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல, பா.ஜ., தயாராகி விட்டதாம்.'அடுத்த முறை தமிழகத்தில் பயணம் செய்யும் போது, பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ, இந்த கருப்பர் கூட்டம் தொடர்பாக பேசுவர். தமிழக கட்சி களுக்கும், இந்த கூட்டத்திற்கும் உள்ள உறவை வெளிப்படுத்துவர்' என்கின்றனர், டில்லி பா.ஜ.,வினர். இந்த விவகாரத்தில் கைமாறிய பணம் தொடர்பான விவகாரத்தில், அமலாக்க துறையும் விசாரணையில் இறங்கும் என சொல்லப்படுகிறது.


Advertisement
வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravichandran s - chennai,இந்தியா
11-ஆக-202013:03:38 IST Report Abuse
ravichandran s ஹே எல்லம்மன் மனசுக்கு என்ன தோணிச்சோ அதை சொல்லாதே . நிறைய படிக்கணும்
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
04-ஆக-202009:50:55 IST Report Abuse
Ellamman கறுப்பர் கூட்டத்தின் ஆள் முன்னாள் ராஷ்டிரிய ஸ்வயம் சேவை அங்கத்தினர்... அதையும் சேர்த்து விசாரிக்க சொல்லுங்கள்... இதன் பின்னால் இருக்கும் அரசியலையும் சேர்த்து விசாரிக்க சொல்லுங்கள்...
Rate this:
TamilArasan - Nellai,இந்தியா
04-ஆக-202016:50:19 IST Report Abuse
TamilArasanஅத அந்த ... சொல்கிறது அதை நம்பச்சொல்கிறாயா...? இப்படி நான் தீவிர முருக பக்தனாய் இருந்தேன் இன்று கர்த்தர் மடியில் இருக்கிறேன் என்று சாட்சி சொல்லும் எத்தனை போலி விசுவாசிகளை கிருத்துவ திரு சபைகளில் பார்க்கிறோம்.......
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-ஆக-202004:03:09 IST Report Abuse
J.V. Iyer தவறு செய்திருந்தால் இவர்களை உடனே தண்டிக்கவேண்டும். தப்பிக்கவிடக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X