உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 03, 2020 | கருத்துகள் (24)
Advertisement
புதுடில்லி; ஜம்மு - -காஷ்மீரில் உள்ள செனாப் ஆற்றின் மீது, உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் அமைக்கும் பணிகள், அடுத்த ஆண்டிற்குள் நிறைவடையும் என, ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.இது குறித்து, ரயில்வே அதிகாரிகள், நேற்று கூறியதாவது:ஜம்மு - காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளை, பிற பகுதிகளுடன், ரயில் மூலம் இணைப்பதற்கான திட்டப்பணிகள், தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

புதுடில்லி; ஜம்மு - -காஷ்மீரில் உள்ள செனாப் ஆற்றின் மீது, உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் அமைக்கும் பணிகள், அடுத்த ஆண்டிற்குள் நிறைவடையும் என, ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.latest tamil newsஇது குறித்து, ரயில்வே அதிகாரிகள், நேற்று கூறியதாவது:ஜம்மு - காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளை, பிற பகுதிகளுடன், ரயில் மூலம் இணைப்பதற்கான திட்டப்பணிகள், தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், ஜம்மு - காஷ்மீரில் உள்ள செனாப் ஆற்றின் குறுக்கே, உலகின் மிக உயர்ந்த, ரயில் பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பாலம், தரை மட்டத்தில் இருந்து, 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு வருகிறது.

உலகின் மிக உயரத்தில் வடிவமைக்கப்படும் இந்த பாலம், அதிகபட்சமாக மணிக்கு, 266 கி.மீ., காற்றின் வேகத்தை தாங்கக் கூடியதாக இருக்கும். இந்த ரயில் திட்டத்தின் கீழ் உள்ள பணிகள், ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள, 111 கி.மீ., துாரம் உள்ள கத்ரா - பானிஹால் பிரிவில், பணிகள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மொத்த முள்ள 174 கி.மீ., சுரங்க பாதைகளில், 126 கி.மீ.,க்கு பணிகள் நிறைவடைந்துள்ளன. கடந்த ஓராண்டில், மத்திய அரசு அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், பாலத்தின் கட்டுமான பணிகள், மிக விரைவாக நடைபெறுவதால், அடுத்த ஆண்டிற்குள் நிறைவடையும்.


latest tamil newsஇந்த ரயில் பாலம், 2022ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் நிலையில், காஷ்மீர், நாட்டின் பிற பகுதிகளுடன், ரயில் மூலம் இணைக்கப்படும்.இத்திட்டப்பணிகள், ஜம்மு - காஷ்மீரின் பொருளாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், அதன் அபிவிருத்திக்கும் உதவியாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Ravichandran - Chennai,இந்தியா
04-ஆக-202017:46:18 IST Report Abuse
Indian  Ravichandran மோடி அரசு செய்யும் அற்புத பணிகள் தமிழக மக்களுக்கு தெரியாமல் வைத்திருக்கும் தமிழக அரசியல் வியாதிகள் வெட்கப்படவேண்டும். முப்பத்தி ஒம்போது எம்பிக்கள் பாராளுமன்றத்தில் போண்டா சட்டினி தின்றத்துதான் மிச்சம், ஆனா போட்ட காசை பத்த எடுக்கிறதுல மகா கில்லாடிங்கப்பா. ஒரு பெரிய திட்டத்தை கொண்டுவரமுடியாத இந்த கட்சியை அடுத்த முறையும் தவறாம ஜெயிக்க வையுங்க மக்களே. அப்படியே மோடி ஒழிக கோஷத்தை மறந்துராதீங்க
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
09-ஆக-202000:47:14 IST Report Abuse
Ramesh Rஇதெல்லாம் காங் ஆட்சி காலத்தில் போடா பட்டது அய்யா...
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
03-ஆக-202016:44:48 IST Report Abuse
konanki தமிழ் நாட்டிற்கு எந்த ரயில்வே புராஜெக்டும் எப்போதுமே வராது. காரணம் 1திராவிட கட்சிகளின் தலைவர்கள் 2. தனியார் பஸ் நிறுவனங்கள் அவர்களை நன்றாக "கவனிப்பது". 3. தமிழ் நாட்டில் ஓடும் ஆம்னி பஸ்கள் பெரும்பாலும் கட்சி தலைவர்கள் /உயர் நிர்வாகம்/போலிஸ்/போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் இவர்களுக்கு சொந்தமானவை என்பது ஊரறிந்த ரகசியம் என்று போக்குவரத்து துறை செய்தி
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
03-ஆக-202016:35:53 IST Report Abuse
konanki இந்த புராஜெக்ட் 2002ல் வாஜ்பேய் பிரதமர் ஆக இருக்கும் போது ஆரம்பம். 2008 ல் மண்ணு அரசு இதை நிறுத்தியது. 2014ல் மோடி ஆட்சி திரும்பவும் இதை எடுத்தது. 2020 முடிய வேண்டிய ப்ராஜக்ட். 2021 ல் முடியும் என்கிறார்கள். பார்ப்போம்.
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
04-ஆக-202007:25:08 IST Report Abuse
Darmavanஏன் மண்ணு அரசு நிறுத்தியது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X