பொது செய்தி

இந்தியா

அயோத்தி ராமர் கோவிலும் தமிழகத்தில் கிடைத்த உதவியும்...

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 03, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement

வரும், 5ம் தேதி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்படுகிறது. பிரதமர் மோடி உட்பட, பலர் கலந்து கொள்கின்றனர்.latest tamil newsகொரோனாவால் இந்த நிகழ்ச்சி அடக்கி வாசிக்கப்படுகிறது.பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கைகளில், ராமர் கோவில் கட்டுவோம் என, தொடர்ந்து வாக்குறுதி அளிக்கப்பட்டு வந்தது. இப்போது அதை, மோடி தலைமையில் நிறைவேற்றுகிறது, பா.ஜ., அயோத்தி ராமர் கோவிலுக்கும், தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து, டில்லியில், குறிப்பாக பா.ஜ., வட்டாரங்களில் அலசப்படுகிறது.


latest tamil newsமுதலாவதாக, காஞ்சி சங்கராச்சார்யார், ஜெயேந்திர சரஸ்வதி. ராமருக்கு கோவில் கட்டியே ஆக வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை, ஆன்மிக ரீதியாக மேற்கொண்டார், ஜெயேந்திரர். அடுத்தவர், மூத்த வழக்கறிஞரும் இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான, கே. பராசரன். சமஸ்கிருத பண்டிதரான இவர் தான், ராமர் கோவில் வழக்கில், உச்ச நீதிமன்றத்தில், முன் நின்று வாதாடியவர். ராமர் கோவில் டிரஸ்டியாக நியமிக்கப்பட்டுள்ளார். கோவில் கட்ட, சட்ட ரீதியாக உதவியவர், இவர்.

மூன்றாவதாக, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா. ராமர் கோவில் கட்டுவதற்காக, முதன் முதலாக ஆதரவளித்த, மாற்றுக் கட்சி அரசியல் தலைவர் இவர். கோவில் கட்ட, மற்ற கட்சிகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்த போது, முதல்வர் பதவியில் இருந்த போதும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆதரவு கொடுத்தார், ஜெயலலிதா. அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையிலேயே கோவில் கட்ட வேண்டும் என சொன்னவர். அரசியல் ரீதியாக, மோடிக்கு இந்த கோவில் விவகாரத்தில் உதவினார், ஜெ.,

இப்படி இந்த மூவரும், ஆன்மிக, சட்ட மற்றும் அரசியல் ரீதியாக, அயோத்தியில் கோவில் கட்ட உதவி செய்துள்ளது குறித்து, பா.ஜ., வட்டாரங்களில் ஆர்வமாக உரையாடிக் கொள்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஆக-202018:22:44 IST Report Abuse
Tamilan காஞ்சியை அரசியல் சட்ட அரசுகள் அடக்க நினைத்தது
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
03-ஆக-202016:28:08 IST Report Abuse
konanki 2000 /04 களில் ஜெயேந்திரர் மற்றும் இஸ்லாமிய குருமார்கள் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தி இருவருக்கும் இணக்கமான முடிவை நெருங்கினார். அதன் படி கோயிலும் மசூதியும் அடுத்த த்த காம்பவுண்ட்களில் கட்ட இரு சமூகமும் ஒத்து கொள்ளும் நிலை. மற்ற அரசியல் கட்சிகள் ஆதரவும் கொடுத்தனர். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்து இதை நிறுத்தியது. இதனால் 1. காங்கிரஸ் நிரந்தரமாக வட இந்திய முஸ்லீம்களின் ஓட்டை இழந்தது. 2. அடுத்த காம்புவண்டில் மசூதி வரும் வாய்ப்பும் போச்சு. கம்யூனிஸ்ட் கட்சியின் எல்லாவிதமான நிலைப்பாடுகளிலும் எப்போதுமே இந்திய சாமான்ய மக்களுக்கு இழப்பு தான். இப்போது புதிய கல்வி கொள்கையை தமிழ் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இதனால் நஷ்டம் சாமான்ய தமிழ் மக்களுக்கு தான்.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
03-ஆக-202012:51:25 IST Report Abuse
Thiagarajan Kodandaraman இறைவன் மீதுள்ள பக்தியில் எந்த சமாதானமும் செய்யாமல் ..போட்டுகொண்டு இந்து ஓட்டுக்களை வாங்கி இந்துக்கோவில்களின் சொத்துக்களை கொள்ளை அடிக்காமல் பக்தியை வீரமாய் வாழ்ந்து காட்டிய வீரமங்கை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X