பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இரு மொழி கொள்கை தொடரும்: முதல்வர்

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 03, 2020 | கருத்துகள் (115)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், மும்மொழி கொள்கையை அனுமதிக்க மாட்டோம். இரு மொழி கொள்கையே தொடரும் என முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இரு மொழி கொள்கையில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக பல காலகட்டங்களில் தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். இரு மொழி கொள்கையை வலியுறுத்தி தமிழக
tamil nadu, bilingual policy, national election policy, தமிழகம், மும்மொழி கொள்கை, முதல்வர், முதல்வர் இபிஎஸ்,

சென்னை: தமிழகத்தில், மும்மொழி கொள்கையை அனுமதிக்க மாட்டோம். இரு மொழி கொள்கையே தொடரும் என முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இரு மொழி கொள்கையில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக பல காலகட்டங்களில் தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். இரு மொழி கொள்கையை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரைவு தேசிய கல்விக்கொள்கையை வெளியிட்ட போது, அதில், மும்மொழி கொள்கை இடம்பெற்றதை சுட்டி காட்டி அதனை தீவிரமாக எதிர்த்தது.

மேலும், தமிழகத்தை பொறுத்தமட்டில், இரு மொழி கொள்கையை கடைபிடிப்போம் என 2019 ஜூனில் கடிதம் எழுதினேன். இரு மொழி கொள்கையை கடைபிடிப்போம் என சட்டசபையில் நடந்த விவாதத்தின் போதும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளேன்.


latest tamil news
தற்போது, மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பெற்றிருந்தாலும், , மும்மொழி கொள்கையை தமிழகத்தில் எப்போதும் அனுமதிக்க மாட்டோம். இரு மொழி கொள்கையையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என தெரிவித்து கொள்கிறேன்.

தமிழகத்தில் ஒட்டு மொத்த உணர்வும், அதிமுக உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும் இரு மொழி கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர். இச்சூழ்நிலையில், மத்திய அரசுஅறிவித்த தனது புதிய கல்வி கொள்கையில், மும்மொழி கொள்கை இடம்பெற்றிருப்பது வேதனையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையினை மறுபரிசீலனை செய்து அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்தி கொள்ள வேண்டும் என பிரதமரை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (115)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
10-ஆக-202007:14:02 IST Report Abuse
ocean தமிழக சட்டபேரவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆளும் தமிழக அரசு மொழி பிரச்சினையை பேசினால் அது எதிர் கட்சிக்கு சாதகமாகி விடும். தலைமை கோள்சாரத்தை கவனித்து செயல் படுவது நல்லது..
Rate this:
Cancel
ocean - Kadappa,இந்தியா
10-ஆக-202007:04:06 IST Report Abuse
ocean இந்திய ஜனநாயகம் பல மொழிகள் பேசும் மக்கள் தரும் வாக்குரிமையில் இயங்குகிறது. இந்தி மொழியை வட மாநிலத்தவர்கள் பல பாணிகளில் அவரவர் மாநில வட்டார பழக்க வழக்கங்கள் படி மாற்றி பேசுகிறார்கள். வட இந்திய பகுதிகளில் அசல் இந்தி மொழி எந்த மாநில ஆட்சி மொழியாகவும் இல்லை. அது அசலாக எவராலும் பேசப்படவில்லை. இந்தியை ஆட்சியில் திணித்தவன் பக்கா காங்கிரஸ்காரன். அதை இன்றளவும் ஆதரிப்பவன் சொக்கா காங்கிரஸ் காரன். இது சட்டத்தின் பிடிக்குள் இருக்கும் மாறாத பிரச்சனை. இதை வைத்து திராவிட கட்சிகள் அரசியல் செய்கின்றனர்.
Rate this:
Cancel
ocean - Kadappa,இந்தியா
10-ஆக-202005:16:32 IST Report Abuse
ocean ஜாதி மதங்களில் காட்டும் வேற்றுமை மொழிகளில் வரக்கூடாது. மைய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு மறு மொழி கூறுதல் ஆளுமை. கொள்கைக்கு முரணானது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X