பொது செய்தி

இந்தியா

ராமர் கோயில் போல் மாற்றி அமைக்கப்படும் அயோத்தி ரயில் நிலையம்

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 03, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Ayodhya, ayodhya Railway Station, Ram Temple, Railway Minister, அயோத்தி, ரயில்நிலையம், ராமர்கோயில், ரயில்வே அமைச்சர், பியூஸ் கோயல்

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் வடிவில் ரயில் நிலையம் மாற்றியமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி., மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சி நாளை மறுநாள் (ஆக.,05) நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். இந்நிலையில், அயோத்தி ரயில் நிலையத்தை ராமர் கோயில் வடிவத்திற்கு மாற்றியமைக்க உள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்ட இந்த ரயில் நிலையத்தை மாற்றியமைக்க ரயில்வே பட்ஜெட்டில், ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ரூ.104 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.


latest tamil news



அயோத்தி ரயில் நிலையத்தை மாற்றியமைக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். இதற்கான மாதிரி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், அயோத்தி ரயில் நிலைய முதற்கட்ட மறுசீரமைப்பு பணிகள் அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என வடக்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
ரயில் நிலைய வளாகத்தின் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளை சரிசெய்தல், டிக்கெட் கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்தல், காத்திருப்பு அறைகளின் எண்ணிக்கை அதிகரித்தல், ஆண்கள் தங்குமிடம், 10 படுக்கைகள் கொண்ட பெண்கள் தங்குமிடம் ஆகியவை கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
03-ஆக-202019:59:54 IST Report Abuse
DARMHAR நல்லது
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
03-ஆக-202019:29:23 IST Report Abuse
SAPERE AUDE ரயில் நிலையத்திற்கு இவ்வளவு சிலவில் மாறுதல் செய்வது அவசியமா என யோசிக்க வேண்டும். இந்த மலிவான உத்தியை தவிர்த்துவிட்டு அங்கு வரும் மக்களுக்கு உபயோகமாகும் தங்கும் அறைகள் கட்டினால் உதவியாக இருக்கும்.
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
03-ஆக-202016:31:42 IST Report Abuse
ஜெயந்தன் உலக மாகா...கிறுக்கர்கள்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X