இரு மொழி கொள்கை: திமுக வரவேற்பு: பாஜ., எதிர்ப்பு| M K Stalin welcomes TN government's decision on Bilingual policy | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இரு மொழி கொள்கை: திமுக வரவேற்பு: பாஜ., எதிர்ப்பு

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 03, 2020 | கருத்துகள் (89)
Share
சென்னை: தமிழகத்தில் இரு மொழி கொள்கை மட்டுமே அமல்படுத்தப்படும் என முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். இதற்கு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், பா.ஜ.,வின் வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: #NEP2020 பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள @CMOTamilNaduவுக்கு நன்றி!
M K Stalin, tamil nadu, Bilingual policy, new education policy,இருமொழி கொள்கை, திமுக, ஸ்டாலின், பா.ஜ., வானதி சீனிவாசன்,

சென்னை: தமிழகத்தில் இரு மொழி கொள்கை மட்டுமே அமல்படுத்தப்படும் என முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். இதற்கு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், பா.ஜ.,வின் வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


latest tamil news
இது தொடர்பாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:பா.ஜ., மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது: முதல்வரின் அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது. மக்களின் கருத்திற்கு முதல்வர் மதிப்பளிக்க வேண்டும். 50 ஆண்டுகளாக இரு மொழி கொள்கை அமலில் உள்ளது. மீண்டும் அமல்படுத்தினால், 50 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும். ஏழை, நடுத்தர மக்கள் 3 மொழிகள் படிக்க வேண்டும் என விரும்புகின்றனர். அனைத்து மாணவர்களும், மற்ற மாநிலங்களுக்கு நிகராக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர்.


latest tamil news


ஆனால், ஏழை மாணவர்களால், 3வது மொழி படிக்க முடியவில்லை. அனைவராலும் சி.பி.எஸ்..இ., சென்று படிக்க முடியாது. அரசு பள்ளிகளில் தமிழ் வழி கல்வியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது. அவர்கள் நல்ல நிலைக்கு வர வேண்டும் என எண்ணி, தனது முடிவை மறுபரிசீலனை செய்து முதல்வர் மறு அறிவிப்பு வெளியிட வேண்டும்.

மும்மொழி கொள்கையை எதிர்க்கும், திமுக கூட்டணி எம்.பி.,க்கள் 39 பேருக்கு, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தலா 10 சீட்கள் வழங்கப்படுகின்றன. அதை வியாபாரம் செய்யும் அவர்கள்,மொழிக் கொள்கையை ஆதரிக்கிறோம் எனக்கூறி அதனை மறுப்பார்களா? இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X