கொரோனா உறுதியான எடியூரப்பா: மருத்துவமனையில் அனுமதி: மகளுக்கும் தொற்று| Yediyurappa, daughter test positive for coronavirus | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனா உறுதியான எடியூரப்பா: மருத்துவமனையில் அனுமதி: மகளுக்கும் தொற்று

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 03, 2020 | கருத்துகள் (4)
Share
எடியூரப்பா, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19, corona, Yediyurappa, coronavirus, corona india, covid19

பெங்களூரு: கொரோனா வைரஸ் உறுதிபடுத்தப்பட்ட கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பெங்களூரு பழைய விமான நிலைய சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவரது உடல்நிலை மருத்துவ ரீதியில் ஸ்திரமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மகளுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது

எடியூரப்பாவிற்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: கர்நாடக முதல்வர் எடியூரப்பா, சிகிச்சைக்காக மணிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு ஒத்துழைப்பு வழங்குகிறார். மருத்துவ ரீதியில் உடல்நிலை ஸ்திரமாக உள்ளது. டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று எடியூரப்பா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதவாவது: எனக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. நலமுடன் உள்ளேன். டாக்டர்கள் பரிந்துரைப்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். சமீப நாட்களில் என்னை சந்தித்தவர்கள், சுயமாக முன்வந்து தனிமைபடுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.


latest tamil newsகடந்த சில நாட்களுக்கு முன்னர், எடியூரப்பா வீட்டில் பணியாற்றிய சிலருக்கு கொரோனா உறுதியானதால், அவர் சிலநாட்கள் தனிமைபடுத்தி கொண்டார். தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது, அவருக்கு கொரோனா உறுதியானது. கடந்த சில நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில், எடியூரப்பா கலந்து கொண்டார். கடந்த 29ம் தேதி பெங்களூருவில் நடந்த உயிரியல் அறிவியல் பூங்கா திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார். கடந்த 31 ல் கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து, அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பேசினார். சில அமைச்சர்களையும் சந்தித்தார்.

இதனிடையே, எடியூரப்பா விரைவில் குணமடையவும், மக்களுக்கு பணி செய்யவும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக, முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் மாநில அமைச்சர்கள், எடியூரப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, வனத்துறை அமைச்சர் ஆனந்த் சிங், சுற்றுலாத்துறை அமைச்சர் சிடி ரவி மற்றும் விவசாயத்துறை அமைச்சர் பிசி பாட்டீல் ஆகியோருக்கும் கொரோனா உறுதியாகி சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தனர்.

எடியூரப்பாவின் மகள் அருணா தேவிக்கும் கொரோனா உறுதியானது. மகன் விஜயேந்திரா, முன்னெச்சரிக்கையாக, 7 நாட்கள் தனிமைபடுத்தி கொண்டார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X