அமெரிக்காவில் டிக்டாக் செயலி விற்பனைக்கு டிரம்ப் அவகாசம்

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 03, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Trump, TikTok, Microsoft, donald trump, டிரம்ப், டிக்டாக், மைக்ரோசாப்ட், சீனா, 45நாள், அவகாசம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக்டாக் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு விற்பது தொடர்பாக சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு 45 நாட்கள் அவகாசம் அளிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலி, தனிநபர் தகவல்களை கையாள்வது தேசிய அளவில் பாதுகாப்பற்றது என அமெரிக்கா கருதுகிறது. இதனையடுத்தே மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான யோசனையை நிராகரித்த பின்னர், அமெரிக்காவில் டிக்டாக்கை தடை செய்ய திட்டமிட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதிபர் டிரம்ப் மற்றும் மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்யா நாதெள்ளா இடையே நடந்த ஆலோசனையை தொடர்ந்து வாஷிங்டனை சேர்ந்த ரெட்வுட் நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பைட் டான்ஸிலிருந்து டிக்டாக்கைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடருவதாகவும், மேலும் இது செப்.,15க்குள் ஒப்பந்தத்தை எட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


latest tamil news


டிரம்ப் மனதை உடனடியாக மாற்றியது என்ன என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக, மிகவும் முக்கியமான குடியரசுக் கட்சியின் எம்.பிக்கள், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு டிக்டாக் விற்பனையை ஆதரிக்குமாறு வலியுறுத்தி அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர். பைட் டான்ஸ் மற்றும் மைக்ரோசாப்ட் இடையேயான பேச்சுவார்த்தை அமெரிக்காவின் அன்னிய முதலீட்டு குழு மேற்பார்வையில் நடைபெறும். அமெரிக்காவின் அன்னிய முதலீட்டு குழு, எந்த ஒரு ஒப்பந்தத்தை தடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாகும்.


latest tamil news


‛அதிபரின் கவலைகளை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை மைக்ரோசாப்ட் முழுமையாக பாராட்டுகிறது. ஒரு முழுமையான பாதுகாப்பு மறுஆய்வுக்கு உட்பட்டு டிக்டாக்கை வாங்குவதற்கும், அமெரிக்க கருவூலம் உட்பட அமெரிக்காவிற்கு சரியான பொருளாதார நன்மைகளை வழங்குவதற்கும் உறுதிபூண்டுள்ளது' என மைக்ரோசாப்ட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் வெள்ளை மாளிகை மற்றும் பைட் டான்ஸ் நிறுவனங்கள் இது தொடர்பாக அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் டிக்டாக் செயலி கட்டுப்பாட்டை மைக்ரோசாப்ட் ஏற்குமென தெரிகிறது. மேலும் அனைத்து அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் அமெரிக்காவிற்குள் மட்டுமே இருக்குமென தெரிவித்துள்ளது. மேலும் மற்ற சிறிய அமெரிக்க முதலீட்டாளர்களை டிக்டாக் பங்குகளை வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் அழைக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
03-ஆக-202021:40:09 IST Report Abuse
ocean மொபைல்களில் பதவிடும் விவரங்கள் அனுப்பும் செய்திகள் போட் டோக்கன் என தனியாரின் தொலை தொடர்பு நிறுவனங்கள் மூலம் எதிரிகளுக்கு தெரியும் வாயப்புள்ளதால் அரசே இப்பொருப்பினை ஏற்று நடத்தலாம்.
Rate this:
Cancel
K.ANBARASAN - muscat,ஓமன்
03-ஆக-202019:05:56 IST Report Abuse
K.ANBARASAN இதை அமெரிக்காவின் நயவஞ்சகத்தனம் அல்லது பிச்சைக்காரதனம் என்றும் சொல்லலாம். காரியம் ஆகும் என்றால் கொள்கையையும் அமெரிக்காவிடம் இருந்து விலைக்கு வாங்க முடியும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
03-ஆக-202015:35:01 IST Report Abuse
 Muruga Vel அடிமாட்டு விலைக்கு வாங்க நல்ல சந்தர்ப்பம் ..இந்தியாவில் முகேஷ் அம்பானி வாங்க முயற்சிப்பார் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X