அமித்ஷா எய்ம்ஸ் போகாமல் தனியார் மருத்துவமனைக்கு சென்றது வியப்பாக இருக்கிறது: சசி தரூர்

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 03, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
ShashiTharoor, AmitShah, AIIMS, PrivateHospital, சசிதரூர், அமித்ஷா, எய்ம்ஸ், தனியார் மருத்துவமனை

புதுடில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா தொற்றுக்கு டெல்லி எய்ஸ்ம் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்காமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பது வியப்பாக இருப்பதாக காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நேற்று (ஆக.,02) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காங்கிரஸ் எம்.பி சசி தரூர், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:


latest tamil newsநம்முடைய உள்துறை அமைச்சர் கொரோனா பாதிக்கப்பட்டபோது, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல், அண்டை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்பது வியப்பாக இருக்கிறது. மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த நினைத்தால், எய்ம்ஸ் போன்ற பொது நிறுவனங்களுக்கு அரசின் உயர்ந்த பதவிகளில் இருப்போர் ஆதரவு அளிப்பது அவசியம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramona - london,யுனைடெட் கிங்டம்
04-ஆக-202000:56:52 IST Report Abuse
Ramona இந்தியாவில் படித்த பெருமை கிடையாது என்று நினைத்து தானே இவரும் இவங்க கூட்டாளிகள் வெளி நாட்டில் படித்து சம்பாதித்து இந்தியா வில் குப்பைகள் கூட்டுகிறார், அமீத் ஷா பெரிய மணம் கொண்டு, இவரை போல் காங்கிரஸ் காரர்களுக்கு ஏஐஎம்எஸ் இல இடம் கிடைக்காம போய் விட கூடாது என நினைத்து தனியார் மருத்துவமனை யை நாடி இருப்பார், வேண்டுமென்றால் இவர் அங்கே உடனடியாக அடமிட் செய்து கொள்ளலாமே..
Rate this:
Cancel
r ganesan - kk nagar chennai,இந்தியா
03-ஆக-202022:43:48 IST Report Abuse
r ganesan சசி தரூர் சொல்வதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆட்சி செய்பவர்களுக்கே அரசு மருத்துவ மனையில் நம்பிக்கை இல்லை என்றால் யாருக்கு நம்பிக்கை வரும், தனியார் மருத்துவ மனையில் ivargalukku bill போட மாட்டார்கள். அதன் காரணம்.
Rate this:
Raman - kottambatti,இந்தியா
05-ஆக-202006:57:08 IST Report Abuse
Ramanஉயிரு போச்சுன்னா என்ன செய்ய.. வாழ்க்கை மேலே பயம்.. அதுதான் தனியார் ........
Rate this:
Cancel
chinnathambi 2 - chennai,இந்தியா
03-ஆக-202022:04:04 IST Report Abuse
chinnathambi 2 பேசினால் பதில் சொல்லலாம் பேத்தினால்.......? சஷி தரூர் ஒரு மாதிரியான மனுஷன் அவ்வளவுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X