சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மர்மம் நிறைந்த இலங்கை தாதா மரண வழக்கு: சி.பி.சி.ஐ.டி., க்கு மாற்றம்

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 03, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
இலங்கை, தாதா, அங்கொட லொக்கா, மரணம், சிபிசிஐடி, போலீஸ், கோவை, டிஜிபி

கோவை: நிழல் உலக தாதாக்களின் வாழ்க்கை என்றாலே மர்மம் நிறைந்ததாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் கோவையில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இலங்கையில் போதைப் பொருள் கடத்தும் நிழல் உலக கும்பலைச் சேர்ந்தவர் மதுமகே சந்தனா லசந்தா பெரேரா எனும் அங்கொட லொக்கா, 36. இலங்கையில் பிரபல ரவுடியாகவும், போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நிழல் உலக தாதாகவும் வலம் வந்தவர். பெங்களூருவில் கடந்த ஜூலை 3- ம் தேதி அங்கொட லொக்கா கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கோவையில் தங்கியிருந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:போலீசார் தன்னை நெருங்குவதை அறிந்த அங்கொட லொக்கா கடந்த 2018 ம் ஆண்டு கோவை வந்தார். சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் அப்பார்ட்மென்ட்டில் தங்கியிருந்தவர் மூன்று மாதங்களுக்கு முன் சேரன்மாநகரில் உள்ள அப்பார்ட்மென்ட்டுக்கு குடியேறி உள்ளார். இவருடன் இலங்கையை சேர்ந்த அம்மானி தான்ஜி, 27 என்ற பெண் தங்கினார். கடந்த, இரண்டாண்டுகளில் அங்கொட லொக்காவை சந்திக்க மூன்று முறை அம்மானி தான்ஜி கோவை வந்து சென்றுள்ளார். கடந்த பிப்., முதல் அங்கொட லொக்கா, உடன் கோவையில் தங்கியுள்ளார்.


latest tamil newsமுன்னதாக அங்கொட லொக்காவுக்கு மதுரையை சேர்ந்த வக்கீல் சிவகாமி சுந்தரி, 36, தனது வீட்டில் மூன்று மாதம் அடைக்கலம் கொடுத்துள்ளார். சிவகாமி சுந்தரியின் நண்பர் திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன், 32, அங்கொட லொக்கா, தனது குடியுரிமையை மறைத்து பிரதீப்சிங் என்ற பெயரில் திருப்பூர் முகவரியில் போலி ஆதார் அடையாள அட்டை எடுக்க உதவினார். இதையடுத்து அங்கொட லொக்கா, கோவையில் பிரதீப்சிங்காக உலா வந்தார்.

மாரடைப்பால் கடந்த ஜூலை 4 ம் தேதி உயிரிழந்தார். அங்கொட லொக்கா, உயிரிழந்த பின் அம்மானி தான்ஜி, சிவகாமி சுந்தரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். கோவை வந்த சிவகாமி சுந்தரி, உயிரிழந்தவர் தனது பெரியப்பா மகன் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவர் வழங்கிய போலி ஆதார் அட்டையை கொண்டு வழக்கு பதிவு செய்தனர். பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் சடலத்தை மதுரைக்கு எடுத்துச் சென்று எரித்துள்ளனர். இதன் பின்னர் சந்தேகமடைந்த போலீசார் புலன் விசாரணையில் மேற்கண்ட விபரங்களை கண்டறிந்து அம்மானி தான்ஜி, சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.


மருத்துவமனையில் அனுமதி


கைது செய்யப்பட்ட அம்மானி தான்ஜி, சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் மூவரையும் சிறையில் அடைப்பதற்காக நீதிமன்றத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது கர்ப்பமாக இருந்த அம்மானி தான்ஜிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கர்ப்பம் கலைந்தது. அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


வழக்கு சி.பி.சி.ஐ.டி., க்கு மாற்றம்சர்வதேச அளவில், இவ்வழக்கு செல்வதால் வழக்கை சி.பி.சி.ஐ.டி., க்கு மாற்ற கோவை மாநகர போலீசார் டி.ஜி.பி., திரிபாதிக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வழக்கை சி.பி.சி.ஐ.டி., க்கு மாற்றி டி.ஜி.பி., திரிபாதி மாலை உத்தரவிட்டார். சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி., சங்கர் மற்றும் அதிகாரிகள் வழக்கு குறித்த தகவல்களை கோவை மாநகர போலீசாரிடமிருந்து பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து அங்கொடா லொக்கா மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PR Makudeswaran - Madras,இந்தியா
05-ஆக-202010:39:14 IST Report Abuse
PR Makudeswaran புரியவில்லை???
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
03-ஆக-202021:41:20 IST Report Abuse
Sanny அங்கொடை லோக்க என்பவன் பெரிய கேடி பல கிலோ போதைப்பொருள் வியாபாரி, கடத்தல் காரன், பாதாள உலக ஜம்பவான், இவன் சில வருடங்களுக்கு முன் சிறைக்கைதிகளை கொண்டுசெல்லும் பஸ் ஒன்றை துப்பாக்கிதாக்குதல் நடத்தியவன், ஒரு சிங்கள ஆளும் அரசு இவனை தனது அடியாளாக வைத்திருந்தது, பின்னர் மன கசப்பு வரவே போட்டுத்தள்ள ஆயத்தமானார்கள், தகவல் அறிந்து இந்தியாவுக்கு தப்பி வந்தவன், (இத்தாலிக்கு போக விசா கிடைக்கவில்லை.) கடைசியில் இவனைவிட்டு வைத்தால் பதவிக்கே வேட்டுவைத்துவிடுவான் என்று இஸ்ரேல் மொஸாட் பாணியில் தனது ஆட்களை இந்தியாவுக்கு அனுப்பி போட்டுத்தள்ளிவிட்டார்கள் இதுதான் உண்மை, அவனின் மரணத்தை தேடி வரி பணத்தை வீணாக்குவது வேஸ்ட், இவனுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களுக்கு, ஆதார் போலி அட்டை எடுக்க உதவியவர்களை கடுமையான குண்டர் சட்டத்தில் அடைக்க்கவேண்டும். இதேபோல இந்தியாவுக்கு தாக்குதல் நடத்த சந்தர்ப்பம் பார்த்திருக்கும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கும் இதுமாதிரி உதவி செய்து சொந்த நாட்டையே உலைவைப்பார்கள். ஆதார் அட்டை எடுக்கும் முறையில் கடுமை போக்கு வேண்டு.
Rate this:
Cancel
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
03-ஆக-202021:13:27 IST Report Abuse
Thirumurugan சிங்களவருக்கு அடைக்கலம் கொடுத்து இருக்கிறார்கள் என்றால் நன்றாக விசாரிக்கவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X