பொது செய்தி

இந்தியா

40 கோடியை கடந்தது ஜன்தன் வங்கி கணக்கு; ரூ.1.30 லட்சம் கோடிக்கு மேல் டெபாசிட்

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 03, 2020
Share
Advertisement
Jan Dhan Yojana, Jan Dhan account, bank account, ஜன்தன், வங்கி கணக்கு

புதுடில்லி: 'ஜன்தன் திட்டத்தில் வங்கி கணக்கு தொடங்குவோரின் எண்ணிக்கை 40 கோடியை கடந்துள்ளது. 1.30 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் டெபாசிட் அதிகரித்துள்ளது' என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு ஆக.,28ல், 'பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா' திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அனைவருக்கும் வங்கிக் கணக்கு தேவை என்ற நோக்கத்தில் துவக்கப்பட்ட இத்திட்டத்தில், வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்குபவர்கள், குறைந்தபட்ச இருப்பு வைக்கத் தேவையில்லை. மேலும், மத்திய அரசின் நேரடிப் பணப்பலன், நிதியுதவி ஆகியவை மக்களை எளிதாக சென்றடையும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.


latest tamil news



இத்திட்டம் துவங்கி வரும் 28ம் தேதியுடன் 6ம் ஆண்டை நிறைவு செய்கிறது. இந்நிலையில், நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதிச்சேவைப்பிரிவு தெரிவிக்கையில், ஜன்தன் திட்டத்தில் இதுவரை 40.05 கோடி வங்கி சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், ரூ.1.30 லட்சம் கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

ஜன்தன் வங்கி கணக்கில் கணக்கு வைத்துள்ளவர்களின் விபத்து காப்பீட்டை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக கடந்த 2018 ஆக.,28ம் தேதி மத்திய அரசு உயர்த்தியது. மேலும், கணக்கில் பணம் இல்லாமலே ரூ.10 ஆயிரம் வரை ஓவர் டிராப்ட் பெறும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களில் 50 சதவீதம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X