பொது செய்தி

இந்தியா

ராமர் கோவிலுக்கு ரூ.1 கோடி நிதி அளித்துள்ளோம்: சிவசேனா

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 03, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
Ram Temple, Ayodhya, Shiv Sena, அயோத்தி, ராமர் கோவில், சிவசேனா

மும்பை: அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ.1 கோடி நிதி அளிப்போம் என அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, அறக்கட்டளைக்கு பணம் அனுப்பப்பட்டு விட்டது என சிவசேனா தெரிவித்துள்ளது.

ஹிந்துக் கடவுள் ராமருக்கு, அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான, பூமி பூஜை, நாளை மறுநாள்(ஆக.,5) நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, கடந்த மார்ச் மாதம் அயோத்தி வந்திருந்த போது, ராமர் கோவில் கட்டுமான பணிக்கு ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.


latest tamil news



இந்நிலையில், சிவசேனா தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ராமர் கோவில் கட்டுமான பணிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என சிவசேனா அறிவித்த படி, கடந்த மாதம் 27ம் தேதி, உத்தவ் தாக்கரேவின் 60வது பிறந்த நாளின் போது, ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிற்கு, ரூ.1 கோடி அனுப்பப்பட்டு விட்டது. அதற்கான ஒப்புதல் சீட்டும் பெறப்பட்டது. சிவசேனா அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்ட நிலையில், அறக்கட்டளைக்கு பணம் வரவில்லை என கூறுவது வியப்பளிக்கிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 'சிவேசனா அளித்த வாக்குறுதிப்படி எந்தவிதமான பணமும் அறக்கட்டளைக்கு வரவில்லை' என ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் மகந்த் நிர்த்தயா கோபால் தாஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா மாநிலத்தை மேம்படுத்த? கொரோனவை கட்டுப்படுத்த?
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
03-ஆக-202023:49:41 IST Report Abuse
தல புராணம் PM CARES கணக்கிலே சேர்த்துட்டாங்களோ ??
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஆக-202023:02:24 IST Report Abuse
Tamilan ஒரு கோடி நிதிக்காக அழைக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை . ஆனால் , சாதாரண நாளாக இருந்தால் இவரும் அழைக்கப்படவேண்டிய ஒருவர்தான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X