பொது செய்தி

இந்தியா

கொரோனா சோதனையை அதிகரிக்க உபி., விரைவான ஆன்டிஜென் சோதனையை பயன்படுத்துகிறது

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 03, 2020
Share
Advertisement

லக்னோ : உத்தரபிரதேசத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த விரைவான ஆன்டிஜென் சோதனைகளை பயன்படுத்துவதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக இந்தியாவில் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேசத்திலும் தற்போது நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் அதனை கட்டுக்குள் வைக்க, முதலில் தொற்றுக்கான பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்பதால் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் முன்பை விட தற்போது தினசரி நடத்தப்படும் சோதனையின் திறன் அதிகமாகி வருகின்றன. உத்தரபிரதேசத்தில் பாதிப்புகள் குறித்து விரைவான ஆன்டிஜென் சோதனையை (Rapid test) நம்புவதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

உ.பி.,யில் சராசரியாக தினசரி பரிசோதனை (மாதிரிகளின்) எண்ணிக்கை 93,770 மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. இது மொத்த எண்ணிக்கையில் நாட்டில் மிக உயர்ந்தது. அடுத்ததாக ஒவ்வொரு நாளும் சராசரியாக 61,626 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்படும் தமிழகம், உ.பி.,யை விட 34 சதவீதம் குறைவு. கடந்த மாதத்தில் ஜூலை 1 ன் படி, உ.பி., சராசரியாக ஒரு நாளைக்கு 22,218 மாதிரிகளை சோதித்து வந்தது. அதே நேரத்தில் தமிழகம் 32,338 மாதிரிகளுடன் (45% அதிகமாக) சோதனை செய்து வந்தது. நோய் பாதிப்பு அதிகமான மஹாராஷ்டிராவில் தினசரியாக 24,135 சோதனைகளும், ஆந்திராவில் 24,028 சோதனைகளும், செய்தன. இது உ.பி.,யை விட அதிகமான அதிகமாக சோதனை செய்தன. கடந்த சில வாரங்களாக உ.,பி.யில் சோதனை எவ்வாறு அதிகரித்துள்ளது என்பதை இது காட்டுகிறது.


latest tamil news



உ.பி.,யில் மக்கள் தொகை அதிகம் என்பதால் தொற்றுக்கான சோதனையை உயர்த்துவதும் அவசியம். 1 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு [ உ.பி.,யில் - 3,373 சோதனை , பீஹாரில் -2,493 சோதனை , தெலுங்கானா - 1,913 சோதனை ] தேசிய சராசரியில் 6,794 சோதனைகளை அரசு நடத்தியது. ஆன்டிஜென் சோதனைகளைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கான மாநிலத்தின் முடிவுக்கு அதிகரிப்பு காரணமாக இருக்கலாம். ஒரு ஆன்டிஜென் என்பது ஒரு நோய்க்கு எதிரான ஆன்டிபாடிகளின் உற்பத்தி வடிவத்தில் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் ஒரு புரதமாகும். மேலும் கொரோனா பாதிப்புகளை கண்டறிய RT-PCR சோதனையும் பயன்படுத்தப்படுகிறது.

உ.பி.,அரசு (ஜூலை 20) அன்று 40,659 மாதிரிகளை பரிசோதனை செய்தது. அவற்றில் ​​7,780 அல்லது 19.1% சோதனைகள் மட்டுமே ஆன்டிஜென் சோதனைகளாக உள்ளன. மாநிலத்தில் சோதனை செய்யப்படும் மாதிரிகளில் ஆன்டிஜென் சோதனையின் திறன் தினமும் உயர்ந்து வருகின்றன. ஆக.,1 நிலவரப்படி, மாநிலத்தின் 1,14,844 மாதிரிகளில் சுமார் 69 சதவீதம் ஆன்டிஜென் சோதனையாகும். RT-PCR சோதனைகள் ஒரே மாதிரியாக உள்ளன. நாடு முழுவதும் நடத்தப்பட்ட நான்கு கொரோனா சோதனைகளில் ஒன்று தற்போது விரைவான ஆன்டிஜென் சோதனைக் கருவியைப் பயன்படுத்துவதாக சுகாதாரதுறை தெரிவித்தது.

கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த முடிந்த ஒரே பிராந்தியமான டில்லி, அதன் சோதனையை அளவிட ஆன்டிஜென் சோதனைகளையும் பெரிதும் நம்பியுள்ளது. தொடர்ந்து ஜூலை 30 அன்று, தலைநகரில் நிகழ்த்தப்பட்ட அனைத்து சோதனைகளிலும் 71.6 சதவீதம் ஆன்டிஜென் அடிப்படையிலானது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X