பொது செய்தி

இந்தியா

தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம்: வரும் ஆகஸ்ட் 15ல் பிரதமர் அறிவிப்பு

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 03, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி: மத்திய அரசு மருத்துவத்துறையை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன்படி வரும் ஆகஸ்ட் 15ல் தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம் குறித்து பிரதமர் அறிக்கை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.latest tamil newsஇதற்கான முன்மொழிவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வார இறுதியில் அதற்கான இறுதி ஒப்பந்தம் பெறப்படும் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் சுதந்திரதினம் ஆக.,15 அன்று இது தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.

இத்திட்டம் பிரத்யேக செயலியை அடிப்படையாக கொண்டது. நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதார தனி அடையாள அட்டை வழங்கப்படும். தனிநபர் சுகாதார பதிவுகள், ஆன்லைனில் மருத்துவரின் அறிவுரைகளை பெறுதல், மருத்துவமனைகளின் சுகாதார வசதிகளை பதிவு செய்தல் ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. மின்னணு மருந்தகம், தொலைமருத்துவ சேவையை ஏற்படுத்துவதற்கான ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை வழங்கும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது..

சுமார் ரூ 470 கோடி மதிப்பிலான இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவமனைகள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைக்கப்பட உள்ளனர். இதோடு இல்லாமல் மருத்துவத்துறை சார்ந்த அனைத்து பரிவர்த்தனைகளும், ஆவணங்களும் டிஜிட்டல் மயம் ஆக்கப்பட உள்ளன. நோயாளியின் அனுமதி பெற்ற பிறகே தகவல்களை மருத்துவர்களால் பெற முடியும். மேலும் மக்கள் தங்களது சுகாதார அடையாள அட்டையை ஆதார் எண்ணுடனும் இணைத்துக் கொள்ள முடியும். இந்த சுகாதார அடையாள அட்டையை மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், மருந்தகங்கள் போன்ற இடங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


latest tamil newsஇத்திட்டத்தின் மூலம் நாட்டின் ஒட்டு மொத்த மருத்துவமனைகளின் செயல்பாடு, செயல்திறன், வெளிப்படைத்தன்மை ஆகியவை கணிசமாக மேம்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஐ.நா.,வின் நிலையான வளர்ச்சி எனும் இலக்கை அடைவதற்கான இந்தியாவின் முயற்சியும் துரிதமடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-ஆக-202003:48:28 IST Report Abuse
J.V. Iyer அருமையான திட்டம். சாதாரண உடல் உபாதைகளுக்கு மருத்துவ மனைக்கு செல்லாமலே டாக்டருடன் பேசுவது உத்தமம். நேரம் மிச்சம். நன்றி பிரதமரே நீங்கள் நீடூழி வாழ்க.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
03-ஆக-202022:44:42 IST Report Abuse
தல புராணம் Pre existing condition இருக்குன்னு சொல்லி இன்சூரன்ஸ் தராமல் இருக்க செய்யப்படும் ஏற்பாடு. வேற ஒண்ணுமில்லை..
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
03-ஆக-202021:44:55 IST Report Abuse
vnatarajan தமிழ்நாட்டு எதிர்கட்சிகள் இப்பொழுதே இந்த டிஜிட்டல் மயமாக்கும் கொள்கைக்கு மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க தேவையான ஆராய்ச்சிகளை செய்ய ஆரம்பித்திருப்பார்களே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X