பொது செய்தி

இந்தியா

நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை: பிரசாந்த் பூஷன் விளக்கம்

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 03, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Prashant Bhushan, SC, Supreme Court, பிரசாந்த் பூஷன், சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம்

புதுடில்லி: 'கருத்துச் சுதந்திரம் என்பது நீதித்துறையின் பலம். இது நீதிமன்றத்தை அவமதிப்பதாக ஆகாது' என பிரசாந்த் பூஷன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன், சமீபத்தில், உச்ச நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் கடுமையாக விமர்சித்து, சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' கருத்து தெரிவித்திருந்தார். 'கடந்த, ஆறு ஆண்டுகளில் நாட்டின் ஜனநாயகத்தை அழிப்பதில், உச்ச நீதிமன்றத்துக்கும் பங்கு உள்ளது' என, அதில் அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, பிரசாந்த் பூஷனுக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. இந்நிலையில், பிரசாந்த் பூஷன், மூத்த பத்திரிகையாளர், என்.ராம், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி உள்ளிட்டோர், 'கோர்ட் அவமதிப்பு சட்டம், பேச்சு சுதந்திரத்துக்கும், அரசியல் சாசனத்துக்கும் எதிரானது; அதை ரத்து செய்ய வேண்டும்' என, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.


latest tamil newsஇந்நிலையில், பிரசாந்த் பூஷன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: நீதிபதிகள் மீதான விமர்சனம் நீதிமன்றத்தின் மீதான விமர்சனமாக மாறிவிடாது. தலைமை நீதிபதியின் நடவடிக்கையையோ அல்லது தலைமை நீதிபதிகள் அடுத்தடுத்து வருவதை விமர்சிப்பது நீதிமன்றத்தை அவமதிப்பதாக ஆகாது. நான் டுவிட் செய்தது, கடந்த ஆண்டுகளில் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளை தான்.

கருத்து சுதந்திரம் மற்றும் விமர்சிக்கும் உரிமை ஆகியவை நீதித்துறையின் பலம். இது நீதிமன்றத்தை அவமதிப்பதாகவோ அல்லது நீதிமன்றத்தின் கவுரவத்தை எந்த வகையிலும் குறைக்கவோ செய்யாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
04-ஆக-202016:29:15 IST Report Abuse
r.sundaram அவரவர்களுக்கு இருக்கும் இடத்தை பொறுத்து ஒரு கட்டுப்பாடு உண்டு, அதிகாரமும் உண்டு. அதை புரிந்து கொள்ளாமல் இவர் ஏதோதோ பேசுகிறார்.
Rate this:
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
04-ஆக-202001:01:19 IST Report Abuse
Dr.C.S.Rangarajan நீதிமன்ற தீர்ப்பினை நடுநிலைமை தவறாது விவாதத்திற்கு உட்படுத்தி நம் கண்ணோட்டத்தில் தோன்றிய குறைகளை விளக்கலாம். நீதிமன்றத்தில் இருப்பதால்தான் நீதிபதிகள். நீதிமன்ற தீர்ப்பினை திறனாய்வு செய்யலாம். நீதிபதிகளை விமர்சிப்பது அவமதிப்பாகாது என்றால், பிரசாந்த் பூஷன் அவர்களை தனிப்பட்ட முறையில் ஏசினால் அவர் மான நழ்ட வழக்குக்கு தொடரமாட்டாரா? எல்லையற்ற சுதந்திரம் என்று கூறிக்கொண்டு மற்றவர்களின் சுதந்திரத்திற்கு கடிவாளம் போட நினைப்பது கண்டிக்கத்தக்கதே.
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
03-ஆக-202023:26:48 IST Report Abuse
NicoleThomson இதெல்லாம் ஒரு பொழப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X